• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

என்னை வருணாகவே மாற்றிவிட்டார் மணிரத்னம் – கார்த்தி

April 2, 2017 தண்டோரா குழு

என்னை வருணாக மாற்றிவிட்டார் மணிரத்னம் என நடிகர் கார்த்தி கூறினார்.

இயக்குநர் மணிரத்தினம் இயக்கத்தில் கார்த்தி அதீதி நடிப்பில் உருவாகியுள்ள படம் காற்று வெளியிடை. இப்படம் வரும் 7ம் தேதி வெளியாகவுள்ளது.இந்நிலையில் இப்படத்தின் புரோமோஷனுக்காக நடிகர் கார்த்தி மற்றும் நடிகை அதீதி ஆகியோர் கோவை வந்தனர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த கார்த்தி,

பத்து வருடங்களுக்கு முன்பு நான் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றினேன். இன்று அவரது படத்திலேயே நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இது என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு நிகழ்வாகும்.

காற்று வெளியிடை படத்தில் ஒரு காட்சியில் சின்னதாக சிரித்தேன். அப்போது மணிரத்னம் என்னை அழைத்தார். ‘இந்த படத்தில் கார்த்தி வரக்கூடாது. வருண் தான் எனக்கு வேண்டும்’ என்றார்.

அந்த அளவிற்கு என்னுடைய கதாபாத்திரத்தில் ஒரு இடத்தில் கூட கார்த்தி போன்று தெரிய கூடாது என்பதற்காக மணிரத்தினம் சார் என்னை வேறு ஒருவனாக மாற்றிவிட்டார்.

மேலும் , ரோஜா, பாம்பே போன்று காற்று வெளியிடை படத்தில் எந்த ஒரு சர்ச்சைக்குரிய கருத்துக்களும் இல்லை. இப்படம் முழுக்க முழுக்க காதலை மையமாக வைத்தே படம் உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.

மேலும் படிக்க