• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தொழில் முனைவோர் மேம்பாட்டு துறை இயக்குனராக ராமமோகனராவ் நியமனம்

March 31, 2017 தண்டோரா குழு

முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகனராவ் தொழில் முனைவோர் மேம்பாட்டு துறை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது, தலைமை செயலாளராக இருந்தவர் ராமமோகனராவ்.

டிசம்பர் 21ம் தேதி ராமமோகனராவ் வீட்டை வருமானவரித் துறையினர் திடீர் சோதனை நடத்தினர். இதில் 3௦ லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுக்கள் மற்றும் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது என தகவல் வெளியானது. ஆனால், இது தொடர்பாக அவர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் காத்திருப்போர் பட்டியில் வைக்கப்படிருந்த ராமமோகனராவை தற்போது தொழில் முனைவோர் மேம்பாட்டு துறை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். தொழில் முனைவோர் மேம்பாட்டு துறை இயக்குனராக இதுவரை இருந்த ராஜாராமனை நில நிர்வாக துரையின் முதன்மை செயலாளராகவும் ஆணையாராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க