• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

லாரிகள் வேலைநிறுத்தம் ; 250 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு

March 31, 2017 தண்டோரா குழு

சென்னையில் போக்குவரத்துத் துறை அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், லாரிகள் வேலைநிறுத்தம் இன்றும் தொடர்கிறது. இதனால் நாளொன்று 250 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி, வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் உயர்த்தப்பட்டுள்ள கட்டணங்கள் உள்ளிட்டவற்றை வாபஸ் பெற வேண்டும், சுங்கவரி கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும், காப்பீடு கட்டணத்தை குறைக்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென் மாநில லாரி உரிமையாளர்கள் சங்கம் நேற்று காலை முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த போராட்டம் காரணமாக தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களைச் சேர்ந்த 18 லட்சம் லாரிகள் இயங்கவில்லை. தமிழகத்தை பொருத்தவரை 4 லட்சம் லாரிகள் இயங்கவில்லை.
வேலை நிறுத்த போராட்டம் இன்றும் தொடர்வதால், காய்கறிகள் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் நாளொன்று 250 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை பேசிய லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமாரசாமி கூறுகையில் “ போக்குவரத்து துறை அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தை திருப்தியாக இருந்தது, கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது. இனிமேலும் கால அவகாசம் வழங்க முடியாது என்பதால் போராட்டம் தொடரும்.” என்றார் அவர்.

மேலும் படிக்க