தேசிய மற்றும் கூட்டுறவு வங்கிகளிடம் விவசாயிகள் வாங்கிய கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும், தமிழக அரசு கோரிய வறட்சி நிவாரண நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும், தென்னக நதிகள் இணைப்புக்கு உடனே நடவடிக்கை வேண்டும்உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லி ஜந்தர்மந்தரில் தமிழக விவசாயிகள், 15-வது நாளாக இன்றும்(மார்ச் 28) அரைநிர்வாண போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதுநாள் வரை மண்டை ஓட்டைகழுத்தில் கயிறு கட்டி தொங்கவிடப்பட்ட போராட்டம், எலிக்கறி திண்ணும் போராட்டம், அரைநிர்வாண போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் தமிழக விவசாயிகள் ஈடுபட்டனர். இன்று(மார்ச் 28) பாம்புக்கறி திண்ணும் போராட்டத்தில் ஈடுபட விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.
தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளும்,தமிழ் அமைப்பினரும் தில்லி ஜந்தர்மந்தரில் குவிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தில்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சி லால்குடி அருகே புள்ளப்பாடி பகுதியில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தை நேற்றுதொடங்கி உள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக மக்கள்,மாணவர்கள் என பல தரப்பினரும் களத்தில் இறங்கியுள்ளனர்.
விவசாயிகளுக்கு ஆதரவாக நாடாளுமன்ற தமிழக உறுப்பினர்கள், தமிழக நடிகர்கள்,இயக்குனர்கள்,தமிழக அரசியல் கட்சி தலைவர்கள்.தில்லி தமிழ்இயக்கங்கள் என பல்வேறு தரப்பினரும் விவசாயிகளை நேரில் சென்று சந்தித்தனர்.
இதனிடையே, த.மா.கா.,தலைவர் ஜி.கே.வாசன் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை நேரில் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,இன்று இரவு அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாய பிரதிநிதிகளுடன் குடியரசுத் தலைவர் பிரணாப்முகர்ஜியை சந்திக்க உள்ளதாக தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு