• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கார் மோதி தீப்பிடித்ததில் கார் பந்தய வீரர் அஸ்வின், மனைவி பலி

March 18, 2017 தண்டோரா குழு

பந்தய கார் வீரர் அஸ்வின் சுந்தர் சென்ற கார் மரத்தின் மீது மோதி தீப்பிடித்ததில், அவரும் அவரது மனைவியும் அங்கேயே உயிரிழந்தனர்.

சென்னையைச் சேர்ந்த கார் பந்தய வீரர் அஸ்வின் சுந்தர். அவர் தனது மனைவி நிவேதாவுடன் சனிக்கிழமை அதிகாலையில் பட்டினம்பாக்கம் அருகே சொகுசு காரில் சென்று கொண்டிருந்தார். கார் அதிவேகமாக சென்றதாகக் கூறப்படுகிறது.

கட்டுப்பாட்டை இழந்த அந்த கார் மரத்தின் மீது மோதியது. இதனால் கார் திடீரன்று தீப்பிடித்து எரிந்தது. கார் எரிவதைப் பார்த்த சிலர் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

தீயணைப்பு வீரர்கள் காவல்துறையினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயைக் கட்டுப்படுத்தினர். அதன் பின் காரிலிருந்து இருவரையும் மீட்டபோது, அவர்கள் தீயில் கருகி இறந்துவிட்டனர் என்பது தெரிந்தது.

இந்த விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அஸ்வின் சுந்தர் சமீபத்தில் நடைபெற்ற தேசிய கார் பந்தயத்தில் சாம்பியன் பட்டம் பெற்றவர். அவரது மனைவி சென்னை தனியார் மருத்துவமனையில் மருத்துவர்.

இதனிடையே சாலைத் தடுப்பினால் நிலை தடுமாறிய கார் மரத்தின் மீது மோதியதால் இந்த தீ விபத்து நேர்ந்திருக்கக் கூடும் என்றும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், போலீசார் புலன்விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க