• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆர்.கே. நகர் தேர்தல் அதிகாரி மாற்றம் ஐஏஎஸ் அதிகாரி நியமனம்

March 18, 2017 தண்டோரா குழு

சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் தேர்தல் நடத்தும் அலுவலராக இருந்த பத்மஜாதேவி மாற்றம் செய்யப்பட்டு அவருக்குப் பதிலாக ஐஏஎஸ் அதிகாரியான பிரவீண் நாயர் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் 5-ந் தேதி மரணம் அடைந்தார். அதையடுத்து, அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆர்.கே. நகர் தொகுதி காலியானது.

அந்தத் தொகுதிக்கு ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதையடுத்து ஆர்.கே. நகரில் தேர்தல் நடத்தும் அதிகாரியாக பத்மஜாதேவி நியமனம் செய்யப்பட்டார்.

தேர்தல் நடத்தும் அதிகாரியை மாற்ற வேண்டும் என்று தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்திருந்தன.

இந்நிலையில், பத்மஜாதேவி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக ஐ.ஏ.எஸ். அதிகாரி பிரவீண் நாயர் தேர்தல் நடத்தும் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க