• Download mobile app
01 Mar 2026, SundayEdition - 3672
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மேகாலயா ஆயில் டேங்கர் வெடித்ததில் 3 பேர் பலி

March 14, 2017 தண்டோரா குழு

அசாம் மாநிலத்திலிருந்து மேகாலயா வழியாக மணிப்பூர் சென்று கொண்டிருந்த எண்ணெய் லாரி திடீரென்று கவிழ்ந்து வெடித்ததில் 3 பேர் உயிரிழந்தனர்.

இது குறித்து காவல் துறையினர் கூறுகையில், “மேகாலயா மாநிலத்தின் ரி போய் மாவட்டத்தில் எண்ணெய் டேங்கர் லாரி செவ்வாய்க்கிழமை (மார்ச் 14) வெடித்ததில் 3 பேர் உயிரிழந்தனர்.

அந்த எண்ணெய் ஏற்றிக் கொண்ட லாரி அசாம் தலைநகரான குவாஹட்டியிலிருந்து மணிப்பூர் சென்று கொண்டிருந்தது.மேகலயா ஷில்லாங் அருகே, அந்த லாரியின் ஓட்டுநர் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்தார்.

இதனால், அந்த லாரி கவிழ்ந்தது. இதனால் அந்த லாரியிலிருந்து கசிந்த எண்ணெய் திடீரென்று தீப்பிடித்து, லாரியில் ஏற்றி வரப்பட்ட எண்ணெய் டாங்க் வெடித்தது.அதில், லாரியில் இருந்த மூவரும் இறந்தனர். அவர்களுடைய அடையாளம் இன்னும் தெரியவில்லை. இறந்த 3 பேரின் உடல்கள் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டன” என்று தெரிவித்தார்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைத்துள்ளனர். இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளன

மேலும் படிக்க