• Download mobile app
17 Jul 2026, FridayEdition - 3810
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆந்திரப் பிரதேசத்தில் 6௦-க்கும் மேற்பட்ட தமிழர்கள் கைது

March 9, 2017 தண்டோரா குழு

ஆந்திரப் பிரதேச மாநிலம் கடப்பாவில் செம்மரம் வெட்டி கடத்த முயன்றதாகக் கூறி, 6௦க்கும் மேற்பட்ட தமிழர்களை ஆந்திர மாநில வனத்துறை மற்றும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு அவர்கள் வைத்திருந்த ரூ.8 கோடி மதிப்பிலான 8 டன் செம்மரக் கட்டைகளையும் பறிமுதல் செய்ததாகவும் ஆந்திர மாநில காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஆந்திர மாநிலம் வனத்துறை பகுதியான கடப்பாவில் வழக்கமான ரோந்துப் பணியில் இருந்தபோது, வனப்பகுதிக்குள் 60க்கும் மேற்பட்டோர் மரம் வெட்டுவதைப் பார்த்து வனத்துறை அவர்களைச் சுற்றி வளைத்துக் கைது செய்தனர். பின்னர் அவர்களை விசாரித்ததில் அவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்தது” என்றார்.

இச்சம்பவத்தால் மேலும் சிலர் வனப் பகுதிக்குள் பதுங்கியிருக்ககூடும் என்பதால் வனப் பகுதிக்குள் ஆந்திர வனத்துறையினர் தேடுதல் வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனால் தமிழக, ஆந்திர எல்லைப் பகுதியில் பதற்ற நிலை உருவாகியுள்ளது.

மேலும் படிக்க