• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

புதுதில்லியில் தீயணைக்கச் சென்ற இரு வீரர் பலி, இருவர் காயம்

February 24, 2017 தண்டோரா குழு

புதுதில்லியில் உள்ள ஒரு கடையில் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 24) அதிகாலையில் ஏற்பட்ட தீயை அணைக்க முயன்ற தீயணைப்பு வீரர்கள் இருவர் கருகி இறந்தனர். மேலும் இருவர் பலத்த தீக்காயங்களுக்கு ஆளாயினர். அவர்களது நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. மேலும் சிலருக்குத் தீக்காயம் ஏற்பட்டுள்ளது.

மேற்கு புது தில்லி விகாஸ்புரியில் இந்த விபத்து வெள்ளிக்கிழ ணை அதிகாலை 5.35 மணியளவில் ஏற்பட்டது.

“தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்புப் படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து தீயை அணைத்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கிருந்த எல்பிஜி எரிவாயு உருளை வெடித்து, தீ வேகமாகப் பரவியது. அதில் சிக்கிய தீயணைப்புப் படை வீரர்கள் ஹரி சிங் மீனா, ஹரி ஓம் இருவரும் தீயில் சிக்கி உயிரிழந்தனர்.

தீ விபத்தில் பலத்த காயமடைந்த நவீன், ரவீந்தர் சிங் ஆகியோர் பி.எல். கபூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுடைய நிலை கவலைக்கிடமாக இருக்கிறது” என்று தீயணைப்புப் பிரிவு அதிகாரி தெரிவித்தார்.

“விகாஸ்புரி லால் சந்தையில் உள்ள எச் பிளாக்கில் 10 அடிக்கு 10 அடி என்ற அளவுள்ள கடையில் தீ பற்றியது. இது குறித்த தகவல் வெள்ளிக்கிழமை அதிகாலையில் தகவல் கிடைத்தது. இரண்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தது தீயை அணைத்துக் கொண்டிருந்தன. அப்போதுதான் இச்சம்பவம் நடந்தது” என்றார் அவர்.

தீவிபத்துக்கான காரணம் சரியாகத் தெரியவில்லை. இது குறித்து புது தில்லி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் படிக்க