• Download mobile app
01 Mar 2026, SundayEdition - 3672
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 8 பேருக்கு பன்றிக்காய்ச்சல் ; 36 பேருக்கு அறிகுறிகள்

February 23, 2017 தண்டோரா குழு

கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நோயளிகளில் 8 பேருக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளன என்று கோவை அரசு மருத்துவமனை இருப்பிட மருத்துவர் செளந்திரவேல் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது;

“கோவை அரசு மருத்துவமனையில் பன்றிக்காய்ச்சல் அறிகுறிகளுடன் 36 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் 8 பேருக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளன. மீதம் உள்ள 28 பேரின் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பபட்டுள்ளது.

பன்றிக்காய்ச்சல் உள்ளவர்களுக்கு தனி அறையில் தொடந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டெங்கு காய்ச்சல் காரணமாக 3 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருந்தால் மக்கள் உடனடியாக அரசு மருத்துவர்களை அணுகி கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்.

தனியார் மருத்துவமனையில் முறையாக சிகிச்சை பெறாமல் கடைசி நேரத்தில் அரசு மருத்துவமனைக்கு வருவதால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.கோவை அரசு மருத்துவமனையில் பன்றிக்காய்ச்சலுக்கு தேவையான அனைத்து மருந்துகளும் கையிருப்பில் உள்ளன.

பன்றிக்காய்ச்சல் பரவாமல் தடுக்க சுத்தமாக எப்போதும் கைகளை வைத்துக்கொள்ள வேண்டும், வீடுகளை சுற்றி கொசுக்கள் பெருகாத வாறு பாத்துக்கொள்ள வேண்டும்.”

இவ்வாறு செளந்திரவேல் கூறினார்.

கோவையில் கடந்த சில மாதங்களாக பன்றி காய்ய்சல் பாதிப்பானது அதிகரித்து வருகின்றன. கோவை மட்டுமின்றி திருப்பூர் ,ஈரோடு ,நீலகிரி மாவட்டங்களை சேர்ந்தவர்களும் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க