• Download mobile app
31 Jul 2026, FridayEdition - 3824
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சட்டம் ஒழுங்கு: ஆளுநரிடம் முதல்வர் விளக்கம்

February 14, 2017 தண்டோரா குழு

தமிழகத்தின் சட்டம்ஒழுங்கு நிலை குறித்து முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், தொலைபேசி மூலம் ஆளுநருக்கு விளக்கம் அளித்துள்ளார்.

ஜெயலலிதா மீதான சொத்து வழக்கில் சசிகலா உள்ளிட்ட மூன்று பேர் குற்றவாளிகள் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதைத் தொடர்ந்து கூவத்தூர் விடுதியில் உள்ள எம்.எல்.ஏ-க்களைச் சந்திக்க முதலமைச்சர் ஓ. பன்னீர் செவ்லத்தின் ஆதரவாளரான அமைச்சர்கள் குழு சென்றது.

ஆனால் அவர்கள் கோவளம் பகுதியிலேயே காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
இதையடுத்து தொடர்ந்து வரும் பதற்றமான சூழ்நிலை காரணமாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி கூவத்தூரில் 144 தடை உத்தரவைப் பிறப்பித்தார். இதனால், கூவத்தூர் வழியாக செல்லும் பேருந்துகள் மாற்றுப் பாதையில் இயக்கப்படுகின்றன.

இதன் காரணமாக கூவத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தொலைபேசியில் விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் படிக்க