• Download mobile app
30 Jul 2026, ThursdayEdition - 3823
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

“அம்மாவின் நல்லாட்சி தமிழகத்தில் தொடரும்”

February 14, 2017 தண்டோரா குழு

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நன்கு பாதுகாக்கப்படும் மற்றும் மறைந்த முதல்வரின் நல்லாட்சியும் தொடர்ந்து நடைபெறும் என்று ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

தனது இல்லத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:

“மறைந்த முதல்வர் அம்மாவின் நல்லாட்சியை அனைவரும் பாராட்டினர். அவருடைய கொள்கைகளை, கோட்பாடுகளை இந்த அரசும் செயல்படுத்தும். சட்டம் ஒழுங்குமுறை காப்பற்றப்பட வேண்டியுள்ளது. அதனால், நம்முடைய ஆட்சி நல்ல முறையில் அமைய வேண்டியது அவசியமாக இருக்கிறது.

தற்போது காணப்படும் இந்த தற்காலிக இடையூறு மற்றும் அமைதியின்மை ஆகியவற்றை நீக்கி, நாம் அனைவரும் ஒற்றுமையாக இணைந்து அம்மாவின் நல்லாட்சி தொடர வழிவகுக்க வேண்டும். அதுதான் நம்முடைய முக்கியமான கடமை ஆகும். அமைதி காக்கவும் உறுதியான ஆட்சி விரைவில் நம் அம்மாவின் ஆசியுடன் செயல்படும்.

ஆதரவு அளித்த மக்களுக்கும், அமைச்சர்களுக்கும், மாணவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்”.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க