• Download mobile app
30 Jul 2026, ThursdayEdition - 3823
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக நடிகர்கள் ராமராஜன்,தியாகு

February 12, 2017 தண்டோரா குழு

தமிழக முதல்வர் பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக நடிகர்கள் ராமராஜன், தியாகு, அருண்பாண்டியன் (முன்னாள் எம்.எல்.ஏ.) ஆகியோர் ஞாயிற்றுகிழமை நேரில் சென்று ஆதரவு அளித்துள்ளனர்.

தமிழக முதல்வர் பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு அளித்து ராமராஜன் பேசியதாவது:

ஒரு முறை அல்ல. இரண்டாவது முறை, மூன்றாவதுவது முறையல்ல. நான்காவது முறையும் பன்னீர்செல்வம் முதல்ராவார். ஜெயலலிதாவினால் அடையாளம் காணப்பட்டவரும் அவருக்கு பெருமை சேர்க்க கூடியவர் . காமராஜரின் எளிமை, அண்ணாவின் அறிவு, ஜெயலலிதாவின் துணிவு அனைத்தும் அடங்கியவர்.மக்கள் விரும்பியதால் ஓ.பி.எஸ். அணியில் இணைந்துள்ளேன்.
இவ்வாறு அவர் பேசினார்.

நடிகர் தியாகு பேசியதாவது

பன்னீர்செல்வம் எளிமையான மனிதர். அனைவரையும் அரவணைத்து பேசுவார். உழைப்பால் உயர்ந்தவர். மக்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளக்கூடியவர். தொண்டர்களும், மக்களும் உங்கள் பின்னால் உள்ளார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

அருண் பாண்டியன் பேசியதாவது:

நான் முதல் நாளே பன்னீர்செல்வத்தை பார்த்துவிட்டேன். தமிழர்களின் மானத்தையும், கௌரவத்தையும் காப்பாற்றி விட்டீர்கள் என அப்போதே கூறினேன். அங்கு கூட்டமில்லை. இங்கு சாதாரணமான கூட்டம் அல்ல. பிரியாணிக்காக வந்த கூட்டமல்ல. நாங்களும், அனைத்து இளைஞர்களும் உங்கள் பின்னால் உள்ளோம் .

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க