• Download mobile app
03 Jun 2026, WednesdayEdition - 3766
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

“74 இந்திய வீரர்கள் பாகிஸ்தான் சிறையிலிருக்கலாம்”

February 10, 2017 தண்டோரா குழு

இந்திய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த காணாமல் போன 74 வீர்கள் பாகிஸ்தான் நாட்டின் சிறையில் இருக்கலாம் என்று வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.கே. சிங் கூறினார்.
மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்தில் அவர் அளித்த பதிலில் இதைத் தெரிவித்தார்.

“இது தொடர்பாக பாகிஸ்தான் அரசிடம் இந்திய அரசு பலமுறை கேள்வி எழுப்பியது. எங்களுக்குக் கிடைத்த தகவலின்படி, காணாமல் போன 74 வீர்களும் பாகிஸ்தான் நாட்டின் கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள் என்று தெரியவந்துள்ளது. ஆனால், அவர்கள் அதை பாகிஸ்தான் இதுவரை ஒப்புக்கொள்ளவில்லை.

2௦௦7ம் ஆண்டு காணாமல் போன வீரர்களுடைய உறவினர்களைக் கொண்ட குழு பாகிஸ்தான் சிறைக்குச் செய்தது. ஆனால், அவர்கள் அங்கு இருப்பதற்கான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை” என்றார் அமைச்சர்.“பாகிஸ்தான் சிறையில் இந்தியர்கள் என்று கருதப்படும் 208 பேர் இருக்கின்றனர். அவர்களில் 147 இந்திய மீனவர்கள். மற்றவர்கள் பல்வேறு குற்றங்களுக்காக சிறையில் உள்ளனர்” என்றும் வி.கே. சிங் கூறினார்.

மேலும் படிக்க