November 25, 2026
தண்டோரா குழு
கோவை ஜி.கே.என்.எம் மருத்துவமனையில்,நாள்பட்ட நுரையீரல் உயர் இரத்த அழுத்த நோயான CTEPH-க்கு பிரத்யேக சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் முழுமையாகக் குணமடைய வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
நுரையீரலுக்குச் செல்லும் இரத்தக் குழாய்களில் இரத்த உறைவு ஏற்பட்டு, நாளடைவில் நுரையீரலில் இரத்த அழுத்தம் அதிகரிப்பதால் CTEPH பாதிப்பு ஏற்படுகிறது. இந்நோயின் முக்கிய அறிகுறியான மூச்சுத்திணறல், ஆஸ்துமா உள்ளிட்ட பிற பாதிப்புகளுடன் குழப்பப்படுவதால் நோய் கண்டறிதலில் தாமதம் ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்நோய்க்கு அறுவை சிகிச்சை, பலூன் சிகிச்சை மற்றும் மருந்துகள் மூலம் சிகிச்சை அளிக்க முடியும். நோயாளியின் பாதிப்பு மற்றும் உடல்நிலையைப் பொறுத்து மருத்துவக் குழுவினர் சிகிச்சையைத் தீர்மானிப்பர்.நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளித்தால் நுரையீரல் இரத்த அழுத்தத்தை இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதுடன், முழுமையாகக் குணமடையவும் வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
நோய் விழிப்புணர்வு, ஆரம்பகால கண்டறிதல், சிகிச்சைக்குப் பிந்தைய கண்காணிப்பு மற்றும் தொடர் மருத்துவப் பராமரிப்பு ஆகியவற்றை வழங்குவதே இம்மையத்தின் முக்கிய நோக்கமாகும்.