• Download mobile app
16 Nov 2026, MondayEdition - 3932
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 1,000க்கும் மேற்பட்ட யூஸ்டு கார்கள் ஒரே இடத்தில் விற்பனை! நவம்பர் 20ல் மெகா கார் கண்காட்சி தொடக்கம்

November 16, 2026 தண்டோரா குழு

கோவையில் முதன்முறையாக 1,000க்கும் மேற்பட்ட பயன்படுத்தப்பட்ட கார்கள் ஒரே இடத்தில் இடம்பெறும் 3வது மெகா யூஸ்டு கார்ஸ் மாநில மாநாடு, நவம்பர் 20ம் தேதி தொடங்குகிறது.

கார்ஸ் 327 நிறுவனம் சார்பில் அவிநாசி சாலை, தொட்டிபாளையம் பிரிவில் உள்ள செல் பெட்ரோல் பங்க் எதிரே நவம்பர் 20ம் தேதி முதல் 29ம் தேதி வரை இக்கண்காட்சி நடைபெறுகிறது.

இதுகுறித்து பட்டணம் பகுதியில் செய்தியாளர்களிடம் பேசிய கார்ஸ் 327 நிறுவனத்தின் தலைவர் விஷ்ணு வேணுகோபால்,

குறைந்த விலை கார்கள் முதல் உயர்ரக கார்கள் வரை 1,000க்கும் மேற்பட்ட கார்கள் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவித்தார்.மேலும், வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் முதல் சர்வீஸ் இலவசம், ரூ.1,000 மதிப்பிலான ஃபாஸ்டேக் ரீசார்ஜ் உள்ளிட்ட சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன. வங்கிக் கடன் பெறுவதற்காக 20க்கும் மேற்பட்ட நிதித்துறை நிபுணர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர்.

கார் விற்பனையுடன் மட்டுமின்றி, இன்சூரன்ஸ், ஒர்க்ஷாப், பெயிண்டிங், கார் ஆக்சஸரீஸ் மற்றும் உதிரிபாகங்கள் உள்ளிட்ட அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

காலை 9.30 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் இக்கண்காட்சியில், பொதுமக்கள் குடும்பத்துடன் பங்கேற்று தங்களது பட்ஜெட் மற்றும் தேவைக்கு ஏற்ற கார்களைத் தேர்வு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க