• Download mobile app
21 Oct 2026, WednesdayEdition - 3906
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

‘தத்கால் என்பிஎஸ்’ வசதியுடன் பிஎச்ஐஎம் பெமென்ட்ஸ் ஆப் மூலம் உடனடியாக என்பிஎஸ் கணக்கைத் தொடங்கலாம்!

October 21, 2026 தண்டோரா குழு

இந்திய தேசியப் பணப்பரிவர்த்தனைக் கழகமான நிறுவனத்தின் முழுமையான துணை நிறுவனமாகும். இந்நிறுவனம், தத்கால் என்பிஎஸ் சேவை தற்போது பிஎச்ஐஎம் பெமென்ட்ஸ் செயலியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக இன்று அறிவித்துள்ளது.

ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தச் சேவையின் மூலம், பயனர்கள் எந்தவொரு வங்கிக் கிளைக்கும் நேரில் செல்லாமலும், புதிதாக ஆவணங்களைச் சமர்ப்பிக்காமலும், வெறும் மூன்று படிகளில் தேசிய ஓய்வூதியத் திட்டமான கணக்கைத் தொடங்க முடியும்.ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘தத்கால் என்பிஎஸ்’ வசதியின் மூலம், பயனர்கள் வங்கிக் கிளைக்குச் செல்லாமலும், புதிதாக ஆவணங்களைச் சமர்ப்பிக்காமலும், வெறும் மூன்று படிகளில் தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் கணக்கைத் தொடங்க முடியும்.ஏற்கெனவே வங்கியால் சரிபார்க்கப்பட்ட கேஒய்சி விவரங்களைப் பயன்படுத்தி இந்தக் கணக்குத் தொடங்கும் நடைமுறை மேற்கொள்ளப்படுகிறது.

பயனர்கள் தங்களது பிறந்த தேதியை உள்ளிட்டு, தகுதியான வங்கிக் கணக்கைத் தேர்ந்தெடுத்து, யுபிஐ மூலம் மதல் என்பிஎஸ் பங்களிப்பைச் செலுத்த வேண்டும்.இதுகுறித்து இந்திய தேசியப் பணப்பரிவர்த்தனைக் கழகமான நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான திருமதி லலிதா நடராஜ் கூறியதாவது:“இந்தியாவில் கோடிக்கணக்கான மக்களின் அன்றாட நிதிப் பரிவர்த்தனைகளில் கேஒய்சி முக்கியப் பங்கு வகிக்கிறது.

அடுத்தகட்டமாக, என்பிஎஸ் போன்ற நிதித் திட்டங்களை மக்களிடம் எளிதில் கொண்டு சேர்ப்பதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளன.‘தத்கால் என்பிஎஸ்’ வசதியானது, என்பிஎஸ் கணக்கைத் தொடங்குவதில் உள்ள ஆரம்பகட்டத் தடையை நீக்குகிறது.இதன் மூலம், தகுதியுள்ள பயனர்கள் கேஒய்சி செயலியின் வாயிலாகவே நேரடியாக என்பிஎஸ் கணக்கைத் தொடங்க முடியும். இதன் வாயிலாக, பங்களிப்புகளைச் செலுத்துவதற்கு உதவும் தளமாக மட்டுமல்லாமல், என்பிஎஸ் கணக்குத் தொடங்கும் நடைமுறைக்கும் பிஎச்ஐஎம் ஆதரவளிக்கிறது.

”18 முதல் 85 வயதுக்குட்பட்ட தகுதியுள்ள இந்தியக் குடிமக்கள், பிஎச்ஐஎம் பெமென்ட்ஸ் ஆப் -இல் உள்ள ‘தத்கால் என்பிஎஸ்’ வசதியின் மூலம் என்பிஎஸ் கணக்கைத் தொடங்கலாம். ஆரம்பகட்ட குறைந்தபட்சப் பங்களிப்புத் தொகை ரூ.250 ஆகும். அதன் பின்னர், பொருந்தக்கூடிய என்பிஎஸ் விதிமுறைகளுக்கு உட்பட்டு, ரூ.10 முதல் தொடர்ந்து பங்களிப்புகளைச் செலுத்தலாம்.

மேலும் படிக்க