October 9, 2026
தண்டோரா குழு
பிரபல அமெரிக்க டோனட் பிராண்டான கிரிஸ்பி க்ரீம், இந்தியாவில் தனது வர்த்தக விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக கோவையில் தனது நேரடி விற்பனை நிலையங்களைத் தொடங்குகிறது.
புரூக்ஃபீல்ட்ஸ் மால், ப்ரோசோன் மால் மற்றும் கோயம்புத்தூர் விமான நிலையம் ஆகிய மூன்று இடங்களில் கிரிஸ்பி க்ரீம் விற்பனை நிலையங்கள் அக்டோபர் 9ஆம் தேதி திறக்கப்பட்டது. இதனுடன், ஸ்விக்கி மற்றும் ஸோமாட்டோ மூலம் செயல்படும் ஆறு டெலிவரி மையங்கள் வாயிலாக கோயம்புத்தூர் முழுவதும் வாடிக்கையாளர்களுக்கு கிரிஸ்பி க்ரீம் தயாரிப்புகள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு,டெல்லி-என்சிஆர், புனே, ஹைதராபாத், சென்னை, சண்டிகர் மற்றும் ஜெய்ப்பூர் உள்ளிட்ட நகரங்களில் ஏற்கனவே தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தியுள்ள கிரிஸ்பி க்ரீம், வளர்ந்து வரும் நகர்ப்புற சந்தைகளில் தனது இருப்பை வலுப்படுத்தி வருகிறது. இளம் தலைமுறையினரின் அதிகரித்து வரும் நுகர்வு, புதிய உணவு அனுபவங்களுக்கான ஆர்வம் மற்றும் வலுவான கஃபே கலாச்சாரம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு கோயம்புத்தூர் முக்கிய சந்தையாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து க்யூர்ஃபுட்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி கோகுல் காந்தி கூறுகையில்,
“இந்தியாவின் உணவுத்துறை வேகமாக மாறி வருகிறது. உலகளாவிய உணவு பிராண்டுகளுக்கான வரவேற்பு பாரம்பரிய பெருநகரங்களைத் தாண்டி வளர்ந்து வருகிறது. இந்த மாற்றத்தின் முக்கியமான உதாரணமாக கோயம்புத்தூர் உள்ளது. இளம் தலைமுறையினரும் புதிய உணவு அனுபவங்களை விரும்பும் வாடிக்கையாளர்களும் அதிகம் உள்ளதால், கிரிஸ்பி க்ரீமின் வளர்ச்சிக்கு இந்த நகரம் நீண்டகால வாய்ப்புகளை வழங்கும் என நம்புகிறோம்,” என்றார்.
வாடிக்கையாளர்களிடையே பிரபலமான புதிதாக தயாரிக்கப்படும் மென்மையான டோனட்களுடன், கோயம்புத்தூர் விற்பனை நிலையங்களில் புதிதாக தயாரிக்கப்படும் காபி, மில்க்ஷேக்குகள் மற்றும் சில்லர்கள் ஆகியவையும் வழங்கப்பட உள்ளன. இதன் மூலம் காலை உணவு முதல் இரவு நேர உணவு விருப்பங்கள் வரை வாடிக்கையாளர்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் சேவைகள் வழங்கப்படுகின்றன.
புரூக்ஃபீல்ட்ஸ் மால் விற்பனை நிலையம் சிறப்பு ரிப்பன் வெட்டும் மற்றும் குத்துவிளக்கு ஏற்றும் நிகழ்ச்சியுடன் திறக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பிரம்மாண்டமான கிரிஸ்பி க்ரீம் பிக் பாக்ஸ் மூலம் இலவச டோனட்கள் வழங்கப்பட்டதுடன், வாடிக்கையாளர்களைக் கவரும் பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.