October 9, 2026
தண்டோரா குழு
சோனி இந்தியா நிறுவனம் யுஎல்டி டவர் 5, யுஎல்டி டவர் 7 மற்றும் யுஎல்டி டவர் மேக்ஸ் ஆகிய டவர் மாடல்களின் 2வது தலைமுறையை அறிமுகப்படுத்துவதன் மூலம் தனது யுஎல்டி பவர் தொகுப்பின் விரிவாக்கத்தை இன்று அறிவித்துள்ளது.
சக்திவாய்ந்த, ஆழமான பாஸ் மற்றும் ஒரு ஆழ்த்துகின்ற பார்ட்டி அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த புதிய யுஎல்டி பவர் வரிசை, சோனி நிறுவனத்தின் தனித்துவமான ஒலி தொழில்நுட்பத்தை ஒரு தோரணையான, முற்றிலும் புதிய டவர் வடிவமைப்புடன் இணைக்கிறது.
இந்த வரிசையில் வெவ்வேறு இடங்கள் மற்றும் பார்ட்டி சூழல்களில் சக்திவாய்ந்த ஒலியை வழங்குகின்ற யுஎல்டி டவர் 5, யுஎல்டி டவர் 7 மற்றும் யுஎல்டி டவர் மேக்ஸ் , ஆகியவை இடம்பெற்றுள்ளன. உள்ளமைந்த பேட்டரிகளுடன் (டவர் மேக்ஸ் தவிர), எளிதான எடுத்துச் செல்லக்கூடிய தன்மை மற்றும் எக்ஸ்எல்ஆர்/ஆர்சிஏ இணைப்பு உள்ளிட்ட டிஜே -க்கு முக்கியத்துவம் அளிக்கும் அம்சங்களைக் கொண்ட இந்த புதிய ஸ்பீக்கர்கள், சிறிய கூட்டங்கள் முதல் பெரிய வெளிப்புற இடங்கள் வரை எங்கும் மிகச்சிறந்த பாட்டி அனுபவத்தை கொண்டு வர வடிவமைக்கப்பட்டுள்ளன.
சோனி நிறுவனத்தின் புதிய யுஎல்டி டவர் 5, கச்சிதமான மற்றும் எடுத்துச் செல்லக்கூடிய வடிவமைப்பில், பார்ட்டி நிகழ்ச்சிகளுக்கு மிகவும் ஏற்ற சக்திவாய்ந்த 300வாட்ஸ் ஒலி வெளியீட்டை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நிபந்தனைகளின் கீழ் 20 மணி நேரம் வரை பேட்டரி ஆயுள், ஐபி X4 நீர் எதிர்ப்பு, நான்கு கைப்பிடிகள் மற்றும் செங்குத்து மற்றும் கிடைமட்டமாக வைக்கும் ஆதரவுடன், யுஎல்டி டவர் 5 பார்ட்டி எங்கு சென்றாலும் அங்கு செல்ல வடிவமைக்கப்பட்டுள்ளது.
யுஎல்டி டவர் 7 என்பது ‘ யுஎல்டி ‘ சீரிஸ் பார்ட்டி ஸ்பீக்கர்களில் புதிதாக இணைந்துள்ள முதன்மையான மாடலாகும்; இது எந்தவொரு இடத்தையும் ஆழமான பாஸ் மற்றும் 420வாட்ஸ் சக்திவாய்ந்த ஒலியால் நிரப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. யுஎல்டி வரிசையின் புதிய முதன்மைச் சாதனமான யுஎல்டி டவர் மேக்ஸ் , ஒரு தனி ஸ்பீக்கரிலேயே ஒரு அரங்கத்திற்கான உணர்வை உங்கள் வீட்டிற்கே கொண்டு வருகின்ற 2150 வாட்ஸ் வெளியீட்டுத் திறனுடன் கூடிய அதிர வைக்கும் ‘பாஸ்’ மற்றும் பிரம்மாண்டமான ஒலி அழுத்தத்தை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது.
அறிமுக சலுகையாக யுஎல்டி டவர் மேக்ஸ் உடன் ரூ.19,990 மதிப்புள்ள இரட்டை வயர்லெஸ் மைக் பெறுங்கள், மேலும் ரூ.15,000 வரை கேஷ்பேக். யுஎல்டி டவர் 7 -இல் ரூ.4,999 கேஷ்பேக் மற்றும் யுஎல்டி டவர் 5 -இல் ரூ.3,000 கேஷ்பேக் பெறுங்கள். யுஎல்டி டவர் 5 மாடல் அதிகபட்ச சில்லறை விலையில் ரூ.44,490 இருந்து சிறந்த விலையாக ரூ.34,990 க்கும், யுஎல்டி டவர் 7 மாடல் அதிகபட்ச சில்லறை விலையில் ரூ.64,990 இருந்து சிறந்த விலையாக ரூ. 49,990க்கும், யுஎல்டி டவர் மேக்ஸ் மாடல் அதிகபட்ச சில்லறை விலையில் ரூ. 1,74,990 இருந்து சிறந்த விலையாக ரூ. 1,39,990 க்கும் கிடைக்கும்.