• Download mobile app
30 Sep 2026, WednesdayEdition - 3885
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

துடியலூரில் இதய சிகிச்சைக்கான புதிய மையம் – அக்டோபர் 4-ல் அவேரா மருத்துவமனை திறப்பு

September 30, 2026 தண்டோரா குழு

கோவை மேட்டுப்பாளையம் சாலை, துடியலூரில் இதய நோய்களுக்கான பிரத்யேக சிகிச்சை மையமாக அவேரா இதய மருத்துவமனை வரும் அக்டோபர் 4-ம் தேதி திறக்கப்பட உள்ளது.

“இதயத்திற்காக… இதயத்தில் இருந்து” என்ற தத்துவத்துடன் உருவாக்கப்பட்டுள்ள இம்மருத்துவமனையில், இதய நோய்களுக்கான முழுமையான சிகிச்சை ஒரே கூரையின் கீழ் வழங்கப்பட உள்ளதாக மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

100 படுக்கைகள் கொண்ட இம்மருத்துவமனையில்,2 Philips Azurion 7 Series Cath Labs, 2 Getinge Modular Operation Theatres, 18 படுக்கைகள் கொண்ட இதய தீவிர சிகிச்சைப் பிரிவு, 16 படுக்கைகள் கொண்ட இதய-மார்பு அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய பிரிவு உள்ளிட்ட நவீன வசதிகள் இடம்பெற்றுள்ளன.

மேலும்,செயற்கை நுண்ணறிவு ஒருங்கிணைந்த படமெடுக்கும் தொழில்நுட்பத்துடன் கூடிய Philips Incisive Cardiac CT உள்ளிட்ட மேம்பட்ட மருத்துவத் தொழில்நுட்பங்களும் பயன்படுத்தப்பட உள்ளன.இதயவியல், இதய-மார்பு அறுவை சிகிச்சை, மயக்கவியல், தீவிர சிகிச்சை, அவசர சிகிச்சை, கதிரியக்கவியல், நுரையீரல் மருத்துவம் உள்ளிட்ட முக்கிய துறைகளுடன், சிறுநீரகவியல், நரம்பியல், நாளமில்லா சுரப்பியல், பொது மருத்துவம், தோல் மருத்துவம் உள்ளிட்ட கூடுதல் சிறப்பு மருத்துவ சேவைகளும் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

24 மணி நேரமும், வாரத்தின் 7 நாட்களும் மருத்துவ மற்றும் ஆம்புலன்ஸ் சேவைகள் வழங்கப்பட உள்ளதுடன், மேம்பட்ட இதய-மார்பு அறுவை சிகிச்சை வசதிகளும் இடம்பெறும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.அவேரா மருத்துவமனையின் தலைமை மருத்துவர் டாக்டர் ராஜ்பால் அபைசிந்த் மற்றும் டாக்டர் சந்திரசேகர் ஆகியோர் செய்தியாளர்களிடம் இதுகுறித்த தகவல்களை தெரிவித்தனர்.

அக்டோபர் 4-ம் தேதி நடைபெறும் திறப்பு விழாவில் பண்ணாரி அம்மன் குழுமத்தின் தலைவர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு மருத்துவமனையை ரிப்பன் வெட்டி திறந்து வைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க