September 19, 2026
தண்டோரா குழு
ல்தமிழகத்தின் தலைசிறந்த மருத்துவமனைகளில் ஒன்றான கோவை ஜெம் மருத்துவமனையின், புற்றுநோய் சிகிச்சை மையம், பல நூற்றுக்கணக்கான புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 22ம் தேதி புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஆதரவையும் அன்பையும் காட்ட சமுதாயத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்த நாள் ‘ரோஸ் தினம்’ என கொண்டாடப்படுகிறது.
ஜெம் புற்றுநோய் சிகிச்சை மையத்தின் ரோஸ் தின நிகழ்ச்சியானது, புற்று சிகிச்சையில் உள்ள மற்றும் சிகிச்சை முடித்த 100க்கும் மேற்பட்ட நோயாளிகள் கலந்துகொண்டனர்.
ஜெம் புற்றுநோய் சிகிச்சை மையத்தின் இயக்குநர் டாக்டர் பரத் ரங்கராஜன் வரவேற்புரை ஆற்றினார் பின்னர், ஜெம் மருத்துவமனைகளின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் பிரவீன்ராஜ் ஜெம் புற்றுநோய் சிகிச்சை மையத்தில் உள்ள நவீன சிகிச்சை வசதிகளைப் பற்றி எடுத்துரைத்தார்.
ஜெம் மருத்துவமனைகளின் தலைவர் டாக்டர் சி பழனிவேலு பேசுகையில், கடந்த 50 ஆண்டுகளாக புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சையளித்த தனது பயணத்தைப் பற்றி பகிர்ந்து கொண்டார். மேலும், லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை துறையைத் தேர்ந்தெடுப்பதற்கு அவருக்கு உத்வேகம் அளித்த நிகழ்வுகளை பற்றி அவர் நினைவு கூர்ந்தார்.
இந்த நிகழ்வின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட கோவை சிங்காநல்லூர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் K.S.ஸ்ரீகிரி பிரசாத் அவர்கள் புற்றுநோய் சிகிச்சையை முடித்தவர்களுக்கும்,அவர்களின் பராமரிப்பாளர்களுக்கும் தனது உரை மூலம் ஊக்கமளித்தார்.
கடந்த 15 ஆண்டுகளில் புற்றுநோய் சிகிச்சை பெருமளவு முன்னேறியுள்ளதாகவும்,பல நோயாளிகள் இந்த கொடிய நோயிலிருந்து மீண்டு வந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளைகண்டறிந்து, சரியான நேரத்தில் மருத்துவ உதவியை நாடுமாறு அறிவுறுத்தினார்.
அதைத் தொடர்ந்து, சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட திருமதி கே.கிருஷ்ணப்பிரியா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நிகழ்வில் பங்கேற்ற நோயாளிகள் ஊக்கமடையும் வகையில் உரையாற்றி மாவட்ட அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஜெம் புற்றுநோய் சிகிச்சை மையத்தில் பெண்களுக்கான இலவச மார்பக புற்றுநோய் பரிசோதனை திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இறுதியாக அறுவை சிகிச்சை புற்றுநோயியல் துறைத் தலைவர் டாக்டர் சிவகுமார் நன்றியுரை கூறினார்.