• Download mobile app
08 Sep 2026, TuesdayEdition - 3863
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மண்டாடி படத்திற்குப் பிறகு படகு பந்தயத்திற்கும் ஜல்லிக்கட்டு போல் அங்கீகாரம் கிடைக்கும் –கோவையில் நடிகர் சூரி

September 7, 2026 தண்டோரா குழு

கோவை நவக்கரை பகுதியில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ‘மண்டாடி’ படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சூரி, “மண்டாடி படம் வெளியான பிறகு, தமிழகத்தின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு கிடைத்துள்ள அங்கீகாரத்தைப் போல, மீனவர்களின் வீர விளையாட்டான படகு பந்தயத்திற்கும் அரசு உரிய அங்கீகாரம் வழங்கும் என நம்புகிறேன்” என்றார்.

மேலும், தனது திரைப்படம் முதல் முறையாக IMAX திரையில் வெளியாக இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்த சூரி, மண்டாடி திரைப்படம் தான் நடித்த விடுதலை திரைப்படத்தைப் போலவே மக்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பிக்கை தெரிவித்தார்.
படத்தில் இடம்பெறும் புகைப்பிடிக்கும் காட்சிகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், படப்பிடிப்பின்போதே அது தொடர்பாக கேள்வி எழுப்பியதாகவும், கதைக்கு தேவையானதாக இருந்ததால் அந்தக் காட்சிகள் இடம்பெற்றதாகவும் கூறினார்.

அதே நேரத்தில், அதற்குள் ஒரு சமூக செய்தியும் இடம்பெற்றுள்ளதாக விளக்கமளித்தார்.“நம் மண் சார்ந்த கதையில் நடித்திருப்பது எனக்கு பெருமையாக உள்ளது” என தெரிவித்த நடிகர் சூரி, தொடர்ந்து மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடினார். மாணவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அவர்களுடன் இணைந்து நடனமாடினார்.

இளம் தலைமுறையினர் வீர விளையாட்டுகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும், அதே நேரத்தில் கல்வியிலும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் நடிகர் சூரி அறிவுறுத்தினார்.

மேலும் படிக்க