• Download mobile app
07 Sep 2026, MondayEdition - 3862
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் முதியோருக்காக 24×7 ‘அபயம்’ உதவி சேவை தொடக்கம்

September 7, 2026 தண்டோரா குழு

முதியோரின் மருத்துவத் தேவைகள் மற்றும் அவசரகால உதவிகளை ஒருங்கிணைக்கும் வகையில், கோவையைச் சேர்ந்த புவன தர்மம் அறக்கட்டளை சார்பில் ‘அபயம்’ என்ற புதிய முதியோர் நல உதவி சேவை தொடங்கப்பட்டுள்ளது.

மூத்த இதயநோய் சிகிச்சை நிபுணரும், பி.எஸ்.ஜி. சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் இயக்குநருமான டாக்டர் ஜே.எஸ். புவனேஸ்வரன் தலைமையில் செயல்பட்டு வரும் புவன தர்மம் அறக்கட்டளை, கடந்த 2020-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்டது. கலாசாரம், கல்வி, மருத்துவம், சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலன் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அறக்கட்டளை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

‘அபயம்’ சேவையின் மூலம் முதியோரும், அவர்களது குடும்பத்தினரும் 24 மணி நேரமும், வாரத்தின் 7 நாட்களும் (24×7) மருத்துவ உதவியைப் பெற முடியும். புறநோயாளர் சிகிச்சை, உள்நோயாளர் சிகிச்சை மற்றும் அவசர மருத்துவ உதவிகளை ஒருங்கிணைக்க 95146 92026 என்ற பிரத்யேக தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், ‘அபயம்’ சார்பில் வழங்கப்படும் மருத்துவ வழிகாட்டுதல் மற்றும் மருத்துவமனை தன்னார்வலர் ஒருங்கிணைப்பு சேவைகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த புதிய சேவையை பத்மஸ்ரீ டாக்டர் ஆர்.வி. ரமணி, சங்கரா கண் அறக்கட்டளையின் தலைவர், தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் சக்தி மசாலா நிறுவனர் பி.சி. துரைசாமி,இயக்குநர் சாந்தி துரைசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முதியோருக்கான முழுமையான ஆதரவு அமைப்பை உருவாக்கும் நோக்கில், சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் திருவனந்தபுரம் உள்ளிட்ட நகரங்களில் செயல்பட்டு வரும் பிரயோஜனா நிறுவனத்துடனும் ‘அபயம்’ இணைந்து செயல்படுகிறது.

இதன்படி,‘அபயம்’ மருத்துவ வழிகாட்டுதல், இதயநோய் ஆலோசனை மற்றும் மருத்துவமனை வருகை ஒருங்கிணைப்பு உள்ளிட்ட சேவைகளை மேற்கொள்ளும். அதே நேரத்தில், பிரயோஜனா நிறுவனம் முதியோரின் வீட்டிலேயே தேவையான சேவைகள், போக்குவரத்து, பொழுதுபோக்கு மற்றும் துணை சேவைகளை வழங்கும்.
விநாயகர் சதுர்த்தி தினமான செப்டம்பர் 14, 2026 முதல் ‘அபயம்’ சேவை முழுமையாக செயல்படத் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ‘அபயம்’ மொபைல் செயலி மற்றும் இணையதளம் உருவாக்கப்பட்டு வருவதாகவும், அவை விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அறிமுகப்படுத்தப்படும் என்றும் அறக்கட்டளை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க