• Download mobile app
06 Sep 2026, SundayEdition - 3861
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் டுசென் விழிப்புணர்வு தினம்: குழந்தைகளின் திறமைகளை கொண்டாடிய சிறப்பு நிகழ்ச்சி !

September 6, 2026 தண்டோரா குழு

உலக டுசென் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, கோவை நீலாம்பூர் பகுதியில் உள்ள ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை வளாகத்தில் இன்று (செப். 6) விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

மூலக்கூறு கண்டறிதல்,ஆலோசனை, பராமரிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் Molecular Diagnostics, Counseling, Care and Research Centre (MDCRC) சார்பில் நடைபெற்ற 13-வது தொடர் உலக டுசென் விழிப்புணர்வு தின நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. “Access Changes Lives – Opportunity, Equity, Inclusion” என்ற 2026-ம் ஆண்டுக்கான கருப்பொருள் வலியுறுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் குழந்தைகள் மற்றும்
பெற்றோருக்கான பதிவு,பிரார்த்தனை, மொக்க தான், பலூன்களை பறக்கவிடுதல் உள்ளிட்டவை நடைபெற்றன.தொடர்ந்து, அனைவருக்கும் எளிதில் அணுகக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட புதிய Accessible Ambulance அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த ஆம்புலன்ஸ்,சிறப்பு தேவையுடையோருக்கு பாதுகாப்பான, வசதியான மற்றும் கண்ணியமான மருத்துவப் பயணத்தை ஏற்படுத்தும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.தொடர்ந்து, குழந்தைகளுக்கான விளையாட்டுகள், திறமைக்காட்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இளைஞர்களுக்கான அமர்வில் வாய்ப்புகளை உருவாக்குதல், வேலைவாய்ப்பு மற்றும் அதிகாரமளித்தல் தொடர்பான கருத்துப் பகிர்வுகளும் இடம்பெற்றன.

நிகழ்ச்சியில் கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தலைமை விருந்தினராகவும், கோவை SLB IT மையத்தின் தலைவர் சத்யா துலிபாலா சிறப்பு விருந்தினராகவும் பங்கேற்றனர்.
ரெட் டாக்ஸி இயக்குநர் மனோஜ் வேலைவாய்ப்பு இணைப்பு தொடர்பான நிகழ்வில் பங்கேற்றார்.

மேலும், ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை தலைவர் டாக்டர் கே. மதேஸ்வரன், Nu Script Data Solutions Pvt. Ltd. நிர்வாக இயக்குநர் டாக்டர் சித்ரா மனோகர் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

டுசென் தசைநார் சிதைவு (Duchenne Muscular Dystrophy) குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதுடன், பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு சம வாய்ப்பு, சமூக உள்ளடக்கம் மற்றும் அணுகக்கூடிய மருத்துவ வசதிகள் கிடைக்க வேண்டும் என்பதையும் நிகழ்ச்சி வலியுறுத்தியது.

இதுகுறித்து MDCRC அமைப்பின் நிறுவனர் டாக்டர் BR.லட்சுமி கூறுகையில்,

MDCRC கடந்த 2011ம் ஆண்டு முதல் 15 ஆண்டுகளாக கோவையில் டுசென் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி வருகிறது. தமிழ்நாடு அரசுடன் இணைந்து 2016 ஆம் ஆண்டு முதல் 22 ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு முழுவதும் இந்த நோய் உள்ள குழந்தைகளை கண்டறிந்து அவர்களை பரிசோதித்து அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்து வருகிறோம்.

இது மட்டுமின்றி ரெட் டாக்ஸி நிறுவனத்துடன் இணைந்து இவர்களுக்கான வேலைவாய்ப்பையும் உருவாக்கி வருகிறோம். ஏற்கனவே நான்கு பேர் இதில் பணியாற்றி வருகின்றனர்.மேலும் இந்நோய் பாதிப்படைந்து வேலை வாய்ப்பு தேடி வருவோருக்கும் நாங்கள் பல்வேறு உதவிகளை செய்து வருகிறோம் என்றார்.

மேலும் படிக்க