• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பொட்டேட்டோ பேட்டீஸ்

October 16, 2018 awesomecuisine.com

தேவையான பொருட்கள்

வேகவைத்த உருளைகிழங்கு – ஒன்று (மசித்தது).

மைதா மாவு – ஒரு டேபிள் ஸ்பூன்.

எண்ணெய் – தேவையான அளவு.

நெய் – தேவையான அளவு.

சாட் மசாலா – ஒரு டீஸ்பூன்.

உப்பு – தேவைகேற்ப.

ஸ்டஃபிங் செய்ய:

கிரீன் சட்னி:

பச்சை மிளகாய் – இரண்டு (பொடியாக நறுக்கியது).

கொத்தமல்லி – அரை கட்டு.

புதினா – கால் கட்டு.

சர்க்கரை தூள் – ஒரு டீஸ்பூன்

உப்பு – தேவைகேற்ப

எலுமிச்சம்பழம் – அரை பழம் (சாறு)

சட்னி செய்முறை:

புதினா,கொத்தமல்லி,பச்சை மிளகாய்,சர்க்கரை,உப்பு,எலுமிச்சை பழம் சாறு சேர்த்து கோரகோரவென்று சட்னி போல் அரைத்து கொள்ளவும்.

செய்முறை

ஒரு கிண்ணத்தில் வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு,மைதா மாவு,உப்பு,சாட் மசாலா சேர்த்து நன்றாக பந்து போல் பிசைந்து கொள்ளவும்.பிசைந்த மாவில் சிறு உருண்டை எடுத்து நெய்யை கையில் தொட்டு வடை போல் தட்டி நடுவில் கிரீன் சட்னி சிறிதளவு வைத்து மூடி மறுபடியும் வடை போல் தட்டி,மைதா மாவில் புரட்டி தவாவில் எண்ணெய் மற்றும் சிறிது நெய் ஊற்றி காய்ந்ததும் அதில் போட்டு வெந்ததும் திருப்பி போட்டு பொன்னிறமாக வந்ததும் எடுத்து பரிமாறவும்.

மேலும் படிக்க