• Download mobile app
10 Aug 2026, MondayEdition - 3834
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஸ்டேன்ஸ் பள்ளி சார்பில் இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் ( CISCE) மண்டல தடகளப் போட்டிகள்: கோவை நேரு மைதானத்தில் கோலாகல தொடக்கம்

August 10, 2026 தண்டோரா குழு

கோவை ஸ்டேன்ஸ் பள்ளி’ (Stanes ICSE/ISC School) சார்பில், இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் (CISCE) மண்டல அளவிலான தடகளப் போட்டிகள் கோவை நேரு மைதானத்தில் இன்று கோலாகலமாகத் தொடங்கின.

இன்றும்,நாளையும் (ஆகஸ்ட் 10, 11) நடைபெறவுள்ள இப்போட்டிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளைச் சேர்ந்த ஏ, பி, சி மற்றும் டி (Zones A, B, C & D) ஆகிய மண்டலங்களிலிருந்து சுமார் 700-க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றுத் தங்களது விளையாட்டுத் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

நிகழ்ச்சியில் 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற 70 வயதிற்கு மேற்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய டாக்டர் ஜெயக்குமார் ஸ்டானியட்,நிர்வாகக் குழு உறுப்பினர் டாக்டர் சுசீதா ராமச்சந்திரன் ஆகியோர் முதன்மை விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.மேலும், ஸ்டேன்ஸ் ICSE பள்ளி முதல்வர் ஜெனட் ஜெயபிரகாஷ், ஸ்டேன்ஸ் ஏஜ மேல்நிலைப் பள்ளி முதல்வர் P.A.ஜான் ஸ்டீபன், ஸ்டேன்ஸ் CBSE பள்ளி முதல்வர் எலின் ஜெத்ரோ மற்றும் ஸ்டேன்ஸ் சர்வதேசப் பள்ளி முதல்வர் ஜார்ஜினா சிம்மன்ஸ் ஆகியோர் நிகழ்வில் கலந்துகொண்டு வீரர்களை உற்சாகப்படுத்தினர்.

இளம் விளையாட்டு வீரர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வந்து, மண்டல அளவில் சாதனைகள் படைக்க இப்போட்டி ஒரு சிறந்த தளமாக அமையும். ஆகஸ்ட் 10 மற்றும் 11 ஆகிய இரு தினங்கள் நடைபெறும் இத்தடகளப் போட்டிகள் நாளை மாலை நிறைவடைகின்றன.

மேலும் படிக்க