August 10, 2026
தண்டோரா குழு
இந்தியாவின் மிகப்பெரிய வீட்டுமனைத் திட்ட மேம்பாட்டு நிறுவனமான ஜி ஸ்கொயர் ஹவுசிங் கோவை கொடிசியா வர்த்தக மைய வளாகத்தில் நடைபெற்ற ‘க்ரெடாய் கோவை ஃபேர்புரோ பிராப்பர்டி எக்ஸ்போ 2026 -ல் பங்கேற்ற அனைத்து நிறுவனங்களையும் விட மிக அதிக எண்ணிக்கையிலான முன்பதிவுகளை மேற்கொண்டு புதிய சாதனை படைத்துள்ளது.
க்ரெடாய் அமைத்த பிராப்பர்டி எக்ஸ்போவில் முதன்முறையாகக் களமிறங்கிய ஜி ஸ்கொயர் நிறுவனம், கண்காட்சியின் வீட்டு மனைப் பிரிவில் 80% சந்தைப் பங்கைப் பிடித்து, வீட்டுமனை வாங்குபவர்கள் மற்றும் முதலீட்டாளர்களின் பெரும் நம்பிக்கையைப் பெற்ற ப்ராண்டாக தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தியுள்ளது.
இந்தச் சாதனை குறித்து ஜி ஸ்கொயர் குழுமத்தின் நிறுவனரும் நிர்வாக இயக்குநருமான பாலா ராமஜெயம் கூறுகையில்,
“க்ரெடாய் கோவை ‘ஃபேர்ப்ரோ 2026’ கண்காட்சியில் எங்களின் முதல் பங்கேற்பே மிகவும் ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது. இக்கண்காட்சியில் ஜி ஸ்கொயர் நிறுவனம் ரூ.25 கோடி மதிப்பிலான முன்பதிவுகளைப் பதிவு செய்திருப்பதன் மூலம்,அதிக எண்ணிக்கையில் முன்பதிவு செய்யப்பட்ட வீட்டுமனைத் திட்ட மேம்பாட்டு நிறுவனமாக முதலிடம் பிடித்துள்ளது. 700 பேர் நேரில் வந்து பார்வையிட்டதில் 61 முன்பதிவுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பது, வாடிக்கையாளர் ஈர்ப்பு மற்றும் விற்பனை மாற்றத்தின் உயர் விகிதத்தை வெளிப்படுத்துகிறது;
இது அந்த நிகழ்வில் பங்கேற்ற பிற கட்டுமான நிறுவனங்களை விடச் சிறப்பான செயல்திறனாகும்.கண்காட்சியின் போது மேற்கொள்ளப்பட்ட அனைத்து 61 முன்பதிவுகளும் அங்கேயே உடனடியாகச் செய்யப்பட்டன; வாடிக்கையாளர்கள் விரைவாக முடிவெடுத்துத் தங்கள் மனைகளை முன்பதிவு செய்தனர். ஜி ஸ்கொயரின் திட்டங்கள் மீது வீடு வாங்குபவர்கள் கொண்டிருந்த உறுதியான நம்பிக்கையையும், நிறுவனத்தின் அரங்கில் முன்வைக்கப்பட்ட சிறப்பான சலுகைகள் மற்றும் மதிப்புகளுக்குக் கிடைத்த உடனடி வரவேற்பையும் இது காட்டுகிறது.
ஜி ஸ்கொயரின் அரங்கிற்கு கிடைத்த இந்த அமோகமான வரவேற்பு, கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திட்டமிடப்பட்டு, பாதுகாக்கப்பட்ட மற்றும் சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்ற வில்லா மனைகளுக்கான வலுவான தேவையைப் பிரதிபலிக்கிறது. மேலும் கண்காட்சியின் பிரத்தியேகச் சலுகையாக, உடனடியாக வீட்டுமனைகளை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு முத்திரைத்தாள் கட்டணத்தில் 50% தள்ளுபடி உள்ளிட்ட தங்களது பிரத்யேக ‘எக்ஸ்போ சலுகையை’ ஜி ஸ்கொயர் நிறுவனம் ஆகஸ்ட் 16-ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது;
இதன் மூலம் கூடுதல் வாடிக்கையாளர்கள் இச்சலுகைகளைப் பெறும் வாய்ப்பு கிடைக்கிறது.க்ரெடாய் கோவை ‘ஃபேர்புரோ பிராப்பர்டி எக்ஸ்போ 2026’ கண்காட்சியானது இப்பிராந்தியத்தின் முன்னணி வீட்டுமனைத் திட்ட மேம்பாட்டு நிறுவனங்களை ஒரே கூரையின் கீழ் கொண்டு வந்து இணைக்கும் மாபெரும் வர்த்தகக் கண்காட்சியாக முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. மேலும், கோவையின் ரியல் எஸ்டேட் துறையில் மிகப்பெரிய வாய்ப்புகளை வாடிக்கையாளர்களும் முதலீட்டாளர்களும் கண்டறிய ஒரு சிறந்த தளத்தை அமைத்துக் கொடுத்தது.
க்ரெடாய் அமைப்பில் கலந்து கொண்ட ஜி ஸ்கொயரின் இந்த முதல் பங்கேற்பே, நிறுவனத்தின் அசாத்திய வளர்ச்சி, விலை நிர்ணயம் மற்றும் பல ஆண்டுகளாக வாடிக்கையாளர்கள் மத்தியில் கட்டியெழுப்பப்பட்ட நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்தது என்றார்.