• Download mobile app
05 Aug 2026, WednesdayEdition - 3829
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தாய்ப்பால் ஊட்டுதலும், அதற்கு அப்பாலும்” – தாய்ப்பாலின் அவசியத்தை வலியுறுத்திய கோவை ராவ் மருத்துவமனை

August 5, 2026 தண்டோரா குழு

கோவை ஆர். எஸ். புரத்தில் செயல்பட்டு வரும் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனையான ராவ் மருத்துவமனை சார்பில்,கர்ப்பிணிப் பெண்கள், புதிய தாய்மார்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்காக “தாய்ப்பால் ஊட்டுதலும் அதற்கு அப்பாலும்” என்ற தலைப்பில் தாய்ப்பால் ஊட்டுதல், பிறந்த குழந்தைகளின் ஊட்டச்சத்து மற்றும் குழந்தை உணவளிப்பு முறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

எஃப்.ஐ.சி.சி.ஐ. ஃபுளோ கோவை, கோவை ஆக்ருதி ரோட்டரி சங்கம் மற்றும் கோவை இன்னர் வீல் சங்கம் ஆகிய அமைப்புகளுடன் இணைந்து நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் நோக்கம், தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, குழந்தை பிறந்த பின் ஆரம்ப மாதங்களில் தாய்மார்கள் தன்னம்பிக்கையுடன் குழந்தையைப் பராமரிக்க தேவையான நடைமுறை அறிவை வழங்குவதாகும்.

நிகழ்ச்சியில் குழந்தைகள் மற்றும் பச்சிளம் குழந்தைகள் சிறப்பு மருத்துவரான டாக்டர் கே. எஸ்.கிருஷ்ணசாமி, பாலூட்டல் ஆலோசகர் மற்றும் குழந்தை ஊட்டச்சத்து நிபுணரான பேபி ஸ்ரீ ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

தாய்ப்பால் ஊட்டுதல் தொடர்பான பொதுவான சந்தேகங்கள், பிறந்த குழந்தைகளின் உணவளிப்பு முறை, தாய்மார்களின் ஊட்டச்சத்து, துணை உணவுகளை அறிமுகப்படுத்தும் சரியான காலம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து அவர்கள் விளக்கமளித்தனர்.

இதுகுறித்து டாக்டர் கே.எஸ். கிருஷ்ணசாமி கூறும்போது :-

“குழந்தைகளுக்கான மிகச் சிறந்த மற்றும் முழுமையான ஊட்டச்சத்து தாய்ப்பாலே. உலக சுகாதார நிறுவனம் மற்றும் ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதியத்தின் பரிந்துரையின்படி, குழந்தை பிறந்த முதல் ஆறு மாதங்கள் முழுமையாக தாய்ப்பால் மட்டுமே வழங்கப்பட வேண்டும். அதன் பின்னர், பொருத்தமான துணை உணவுகளுடன் இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கு மேலும் தாய்ப்பால் தொடர வேண்டும். இந்த எளிய நடைமுறை, தாய் மற்றும் குழந்தை இருவரின் வாழ்நாள் முழுவதற்குமான ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. ஒவ்வொரு தாயும் தாய்ப்பால் ஊட்டலை வெற்றிகரமாக மேற்கொள்ள தேவையான சரியான வழிகாட்டுதலையும் ஊக்கத்தையும் பெறுவதற்கு உரியவர். தாய்ப்பால் குழந்தையின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதுடன், ஆரோக்கியமான உடல் வளர்ச்சி மற்றும் மூளை வளர்ச்சிக்கும் முக்கிய பங்காற்றுகிறது’’ என்றார்.

இதுகுறித்து பேபி ஸ்ரீ கூறும்போது :-

தாய்ப்பால் ஊட்டும் முறைகள் குறித்து கலந்துரையாடல் வடிவில் விளக்கமளித்தார். குழந்தை சரியாக மார்பகத்தைப் பற்றிப் பால் குடிக்கும் முறை, தாய்ப்பால் கொடுக்கும் நிலைகள், பால் சுரப்பு, தாய்ப்பால் ஊட்டும்போது ஏற்படும் பொதுவான சவால்களை சமாளிக்கும் வழிமுறைகள் குறித்து அவர் எடுத்துரைத்தார்.

மேலும்,திட உணவுகளை அறிமுகப்படுத்துதல் : மாற்றத்தைக் கையாளும் வழிமுறைகள் என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்பு அமர்வில், தாய்ப்பாலைத் தொடர்ந்து எந்தக் காலகட்டத்தில், எவ்வாறு துணை உணவுகளை அறிமுகப்படுத்த வேண்டும் என்பது குறித்தும் அவர் விரிவாக விளக்கினார்.

தாய்ப்பால் ஊட்டுதல் என்பது குழந்தைக்கு உணவளிப்பது மட்டுமல்ல. தாய்-குழந்தை இடையே வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் பாசப்பிணைப்பை உருவாக்கும் செயலாகும். சரியான ஆதரவும் நடைமுறை வழிகாட்டுதலும் கிடைத்தால், ஒவ்வொரு தாயும் தன்னம்பிக்கையுடன் தாய்ப்பால் ஊட்ட முடியும். அதேபோல், சரியான நேரத்தில் துணை உணவுகளை அறிமுகப்படுத்துவது குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கும் தேவையான ஊட்டச்சத்துக்கும் அடித்தளமாக அமையும் என்றார்.

நிகழ்ச்சியில் வெற்றிகரமான தாய்ப்பால் ஊட்டலுக்கான எளிய ஆலோசனைகளையும் நிபுணர்கள் வழங்கினர். குழந்தை பிறந்தவுடன் முடிந்தவரை விரைவாக தாய்ப்பால் கொடுக்கத் தொடங்க வேண்டும்; குழந்தையின் தேவைக்கேற்ப தாய்ப்பால் வழங்க வேண்டும்; சரியான உடல் நிலை மற்றும் மார்பகப் பற்றுதலை உறுதிசெய்ய வேண்டும்; மருத்துவ ஆலோசனை இல்லாமல் தேவையற்ற முறையில் புட்டிப்பால் அல்லது பால் மாவு வழங்குவதைத் தவிர்க்க வேண்டும்; போதிய அளவு தண்ணீர் அருந்தி, சத்தான சமச்சீர் உணவை உட்கொள்ள வேண்டும்; தாய்ப்பால் ஊட்டுவதில் சிரமங்கள் ஏற்பட்டால் ஆரம்பத்திலேயே நிபுணர்களின் உதவியை நாட வேண்டும்; ஒவ்வொரு தாய்ப்பால் ஊட்டும் அனுபவமும் தனித்துவமானது என்பதையும், உதவி கேட்பது பலவீனம் அல்ல, தன்னம்பிக்கையின் அடையாளம் என்பதையும் அவர்கள் வலியுறுத்தினர்.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, மூத்த மகப்பேறு மற்றும் கருத்தரிப்பு நிபுணரான டாக்டர் பி. சுகன்யா கதிர், பிரசவத்திற்குப் பிந்தைய மனித பாப்பிலோமா வைரஸ் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு உரையாற்றினார். குழந்தை பிறந்த பின் இந்தத் தடுப்பூசியை செலுத்துவதன் நன்மைகள் குறித்து விளக்கிய அவர், தாய்மார்கள் குழந்தை பராமரிப்புடன் தங்களது தடுப்பு சுகாதாரத்திற்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் புதிய தாய்மார்கள் ஆர்வத்துடன் பங்கேற்று, நிபுணர்களிடம் தங்களது சந்தேகங்களை முன்வைத்து விளக்கங்களைப் பெற்றனர். தாய்ப்பால் ஊட்டுதல் மற்றும் குழந்தை ஊட்டச்சத்து தொடர்பான நடைமுறை ஆலோசனைகள் அவர்களுக்கு தன்னம்பிக்கையையும் தெளிவையும் அளித்தன. நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் நினைவுப் பரிசாக சிறப்பாகத் தயாரிக்கப்பட்ட பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது.

தாய்ப்பால் ஊட்டுதலும் அதற்கு அப்பாலும் போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம், தாய் மற்றும் குழந்தைகள் நலனை மேம்படுத்தும் தனது பணியை ராவ் மருத்துவமனை தொடர்ந்து முன்னெடுத்து வருவதுடன், ஒவ்வொரு குழந்தையும் ஆரோக்கியமான வாழ்க்கையைத் தொடங்குவதற்குத் தேவையான அறிவையும் நம்பிக்கையையும் பெற்றோருக்கு வழங்குவதில் உறுதியாக செயல்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க