August 2, 2026
தண்டோரா குழு
குளோபல் ஆர்ட் மற்றும் எஸ்.ஐ.பி அகாடமி இணைந்து நடத்திய மாநில அளவிலான 11-வது ‘கலர் சாம்ப் 26’ ஓவியப் போட்டி, கோவை ஹோப்ஸ் கல்லூரி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
போட்டியை கோவை விப்கியார் உயர்நிலைப் பள்ளி முதல்வர் பாபி மேத்யூ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். மாணவர்களுக்கு வாழ்த்துகளையும் ஊக்கத்தையும் தெரிவித்து அவர் உரையாற்றினார்.தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 470-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இதில் பங்கேற்று தங்களது ஓவியத் திறன், படைப்பாற்றல் மற்றும் கற்பனை வளத்தை வெளிப்படுத்தினர்.
நிகழ்ச்சியில் எஸ்.ஐ.பி அகாடமியின் நிர்வாக இயக்குநர் தினேஷ் விக்டர், குளோபல் ஆர்ட் நிறுவனத்தின் வணிகத் தலைவர் நம்ரத்தா முகர்ஜி மற்றும் கரிமா சேகல் ஆகியோர் முதன்மை விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாட்டாளர்கள் கூறுகையில்,
மாணவர்களின் கலைத்திறன், தனித்துவமான சிந்தனை மற்றும் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த மாநில அளவிலான ஓவியப் போட்டி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.போட்டியின் நிறைவில் சிறப்பாக ஓவியம் வரைந்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டதுடன், போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.