• Download mobile app
07 Sep 2026, MondayEdition - 3862
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் மாபெரும் இலவச பல்துறை மருத்துவ முகாம்: 250-க்கும் மேற்பட்டோர் பயன்

July 23, 2026 தண்டோரா குழு

கோவை சின்னதாடகம் மற்றும் ஆர்.எஸ்.புரம் பகுதிகளில் செயல்பட்டு வரும் ஸ்ரீ ஐஸ்வரீயா மருத்துவமனை மற்றும் இந்திய மருத்துவ சங்கம் (IMA) கோவை கிளை இணைந்து நடத்திய மாபெரும் இலவச பல்துறை மருத்துவ முகாம், சின்னதாடகம் வடக்கு வீதியில் உள்ள ஸ்ரீ ஐஸ்வரீயா மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.

இந்த முகாமை கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சரும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சருமான வி. சம்பத்குமார் முதன்மை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.விழாவில் இந்திய மருத்துவ சங்கம் (தமிழ்நாடு) 2024–2025 கவுரவ செயலாளர் டாக்டர் எஸ். கார்த்திக் பிரபு, சின்னதாடகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஏ.சுமதி,ரோட்டரி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கோவை IMA தலைவர் டாக்டர் கோஷல் ராம், கவுரவ செயலாளர் டாக்டர் டி. பரமேஸ்வரன்,நிதிச் செயலாளர் டாக்டர் பாலமுருகன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு நடைபெற்ற இந்த முகாமில் சர்க்கரை நோய் பரிசோதனை,நரம்பியல் பரிசோதனை, கண் மற்றும் பல் பரிசோதனைகள், கொழுப்பு சத்து பரிசோதனை,கால் பாதம் பாதுகாப்பு குறித்த ஆலோசனை,உடற்பயிற்சி வழிகாட்டுதல், உணவியல் ஆலோசனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சேவைகள் இலவசமாக வழங்கப்பட்டன.

மேலும் பல்துறை நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்கள் பொதுமக்களுக்கு தனிப்பட்ட மருத்துவ ஆலோசனைகளையும் வழங்கினர்.
இந்த இலவச மருத்துவ முகாமில் 250-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனைகள் மற்றும் ஆலோசனைகளை பெற்று பயனடைந்தனர்.

மேலும் படிக்க