• Download mobile app
10 Jul 2026, FridayEdition - 3803
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சுற்றுசூழலுக்கு உகந்த வகையில் எல்பிஜி விநியோகத்தை முன்னெடுக்க டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது!

July 10, 2026 தண்டோரா குழு

‘டிவிஎஸ் வேணு’ குழுமத்தின் ஒரு அங்கமும், இருசக்கர மற்றும் மூன்றுசக்கர வாகனச் சந்தையில் சர்வதேச அளவில் முன்னணி நிறுவனமுமான டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த பொதுத்துறை எரிசக்தி நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பொரேஷன் லிமிடெட் நிறுவனத்துடன் ஒரு முக்கிய உத்திசார் கூட்டு செயல்பாட்டை மேற்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது.

நீடித்து நிலைக்கத்தக்க வணிகப் போக்குவரத்துத் தீர்வுகள் மூலம், இந்தியாவில் வீடுகளுக்கான எல்பிஜி சிலிண்டர் விநியோகக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துவதை இக்கூட்டு செயல்பாடு நோக்கமாகக் கொண்டுள்ளது.இந்த புதிய முன்முயற்சியின் ஒரு பகுதியாக, டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் இந்தியா முழுவதும் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தின் 13,000-க்கும் மேற்பட்ட எல்பிஜி விநியோகஸ்தர்களின் நெட்வொர்க்குடன் இணைந்து பணியாற்றவுள்ளது.

இதன் மூலம் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே சென்று எல்பிஜி சிலிண்டர்களை விநியோகம் செய்யும் பணிகளுக்குத்’டிவிஎஸ் கிங் கார்கோ எச்டி’ வாகனங்கள் பயன்படுத்தப்படும். இது தூய்மையான,அதிக திறன்மிக்க மற்றும் குறைந்த செலவிலான சிலிண்டர் விநியோகத்தை உறுதி செய்வதோடு, இந்தியாவின் பசுமைப் போக்குவரத்து மாற்றத்திற்கு ஆதரவளிக்கும் முயற்சிக்கு முக்கிய நகர்வாகவும் அமையும்.தங்களின் துறைகளில் மிகவும் நம்பகமான மற்றும் மதிப்புமிக்க இரண்டு பெரிய நிறுவனங்களை ஒன்றிணைக்கும் இந்த கூட்டு செயல்பாடானது, டிவிஎஸ் மோட்டாரின் வணிகப் போக்குவரத்து நிபுணத்துவத்தையும்,இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பரவலான விநியோக நெட்வொர்க்கையும் ஒருங்கிணைத்து இந்தியா முழுவதும் எல்பிஜி சிலிண்டர் விநியோகத்தை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லவுள்ளது.

எல்பிஜி சிலிண்டர் விநியோகத்திற்காகத் டிவிஎஸ் கிங் கார்கோ எச்டி ரக வாகனங்களைப் பயன்படுத்துவதன் மூலம் கார்பன் உமிழ்வு பெருமளவு குறைவதோடு, இந்தியன் ஆயில் விநியோகஸ்தர்களுக்கான வாகனப் பராமரிப்பு மற்றும் இயக்கச் செலவுகளும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிவிஎஸ் மோட்டார் மற்றும் இந்தியன் ஆயில் கார்பொரேஷன் நிறுவனத்திற்கு இடையேயான கூட்டு செயல்பாடு குறித்து டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் வணிகப் போக்குவரத்துப் பிரிவின் வணிகத் தலைவர் ரஜத் குப்தா பேசுகையில்,

“டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தில், அன்றாட வணிகச் செயல்பாடுகளை அதிக திறன்மிக்கதாகவும், சுற்றுச்சூழல் பாதிப்பற்றதாகவும் மற்றும் போக்குவரத்துத் தீர்வுகளை உருவாக்குவதில் நாங்கள் தீவிரக் கவனம் செலுத்தி வருகிறோம். இந்தியன் ஆயில் கார்ப்பொரேஷன் லிமிடெட் நிறுவனத்துடனான எங்களது கூட்டு செயல்பாடு, நாடு முழுவதும் உள்ள எல்பிஜி சிலிண்டர் விநியோக முறையை மேம்படுத்துவதில், மக்களின் நம்பிக்கையைப் பெற்ற இரு நிறுவனங்களின் வலிமையையும் ஒன்றிணைக்கிறது.

டிவிஎஸ் கிங் கார்கோ வாகன வரிசையின் மூலம், விநியோகஸ்தர்களின் இயக்கச் செலவுகளைக் குறைக்கவும், உற்பத்தித் திறனை அதிகரிக்கவும், தூய்மையான செயல்பாடுகளுக்கு ஆதரவளிக்கவும் கூடிய நம்பகமான, உயர் செயல்திறன் கொண்ட வாகனங்களை நாங்கள் வழங்குகிறோம். எங்களுக்கு இடையேயான இந்த கூட்டு செயல்பாடு, இந்தியா முழுவதும் உள்ள வணிகங்களுக்கு நீடித்து நிலைக்கத்தக்க போக்குவரத்தை மிகவும் நடைமுறையானதாகவும், எளிதில் பயன்படுத்தக்கூடியதாகவும் மாற்ற உதவும், மேலும், சுற்றுச்சூழலில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாகவும் பசுமையான போக்குவரத்தை முன்னெடுக்கும் மற்றொரு முக்கிய நகர்வாகும்,” என்றார்.

மேலும் படிக்க