• Download mobile app
08 May 2026, FridayEdition - 3740
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பருத்தி இறக்குமதி வரியை முழுமையாக நீக்க வேண்டும் கோவை ஜவுளித்துறையினர் மத்திய அரசுக்கு கோரிக்கை

May 8, 2026 தண்டோரா குழு

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக மூலப்பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து ஜவுளித்துறை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பருத்தி மீதான 11 சதவீத இறக்குமதி வரியை மத்திய அரசு முற்றிலுமாக நீக்க வேண்டும் என்று கோவை ஜவுளித்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.

அமெரிக்காவை மையமாகக் கொண்டு செயல்படும் கெர்சி பருத்தி ஆலோசனை கமிட்டி, இந்தியாவின் பருத்தி விளைச்சல், விலை நிலவரம் மற்றும் ஜவுளித்துறையின் வணிகக் கொள்கைகள் தொடர்பாக ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் இந்திய ஜவுளித்துறையை மேம்படுத்த பல்வேறு பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளன.

இதுகுறித்து கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தென்னிந்திய பஞ்சாலைக் கழகத்தில் இன்று செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் இந்திய ஜவுளித்துறை சம்மேளனத்தின் தலைவர் அஸ்வின் சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

இந்தியாவில் பருத்தி உற்பத்தி மற்றும் தேவைக்கிடையிலான வித்தியாசம், உலக சந்தையில் இந்திய ஜவுளித்துறை எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து ஆய்வறிக்கை தெளிவாக எடுத்துரைக்கிறது. குறிப்பாக பருத்தி மீதான 11 சதவீத இறக்குமதி வரியை முழுமையாக நீக்க வேண்டும் என்பது முக்கிய பரிந்துரையாக இடம்பெற்றுள்ளது.

இந்தியாவில் தற்போது சுமார் 36 லட்சம் பருத்தி பேல்கள் பற்றாக்குறை நிலவுவதால், ஜவுளித்துறை வெளிநாட்டு இறக்குமதியை சார்ந்து இயங்கி வருகிறது. தற்போது ஒரு கேண்டி பருத்தியின் விலை ரூ.67 ஆயிரமாக உள்ளது. இதனுடன் 11 சதவீத இறக்குமதி வரியும் சேருவதால் தொழில் முனைவோருக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்படுகிறது.

இந்தியாவில் பருத்தி உற்பத்தி குறைவாக உள்ளதால், இறக்குமதி வரியை நீக்கினாலும் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாது. எனவே மத்திய அரசு உடனடியாக இந்த வரியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றார்.மேலும், ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக ஜவுளித்துறைக்கு தேவையான பல்வேறு மூலப்பொருட்களின் விலை உயர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

குறிப்பாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு, கேஸ் தட்டுப்பாடு, எண்ணெய் சார்ந்த மூலப்பொருட்களின் விலை உயர்வு, டை மற்றும் கெமிக்கல் பொருட்களின் விலை 20 சதவீதம் வரை அதிகரித்திருப்பது, பேக்கேஜிங் மற்றும் போக்குவரத்து செலவுகள் உயர்வு போன்ற காரணங்களால் ஜவுளித்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.எனவே பருத்தி இறக்குமதி வரியை மத்திய அரசு ரத்து செய்தால், ஜவுளித்துறையில் உற்பத்தி அதிகரித்து புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க