• Download mobile app
07 May 2026, ThursdayEdition - 3739
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்திய வணிகங்களுக்கு உலகளாவிய வாய்ப்புகளை விரிவுபடுத்த ‘வளர்ச்சி உச்சிமாநாடு 2026’: டெல்லியில் வால்மார்ட் நடத்தியது

May 7, 2026 தண்டோரா குழு

இந்திய வணிகங்களுக்கு உலகளாவிய வாய்ப்புகளை விரிவுபடுத்த ‘வளர்ச்சி உச்சிமாநாடு 2026’-ன் இரண்டாவது பதிப்பை புதுடெல்லியில் வால்மார்ட் இன்று நடத்தியது.

உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளில் வளர்ச்சி வாய்ப்புகளை ஆராய்வதற்காக, ஏற்றுமதிக்கு தயாராக உள்ள வணிகங்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், டிஜிட்டல் பிராண்டுகள் மற்றும் வினியோகச் சங்கிலி கூட்டாளர்கள் என ஏராளமான பேர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.

இந்தியாவிலிருந்து ஏற்கனவே 40 பில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்புள்ள பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இதனை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் ஏற்றுமதி சூழலை வலுப்படுத்தவும், மேலும் பல வணிகங்கள் உலகளாவிய சந்தைகளை அடையவும் வால்மார்ட் தொடர்ந்து செயல்படும் என்பதை எடுத்துக்காட்டும் விதமாகவும், வால்மார்ட் விருத்தி மூலம் 1,15,000-க்கும் மேற்பட்ட தொழில்முனைவோரின் வளர்ச்சிக்கு ஆதரவு அளித்து வருவதையும் எடுத்துக்காட்டும் விதமாக இந்த உச்சி மாநாட்டை வால்மார்ட் நடத்தியது.

இதில் வால்மார்ட் மற்றும் பிளிப்கார்ட் தலைவர்கள், உலகளாவிய விநியோகச் சங்கிலிகளில் இந்திய வணிகங்களின் வளர்ந்து வரும் பங்கையும், உள்ளூர் கூட்டாண்மைகள் மற்றும் திறன் மேம்பாட்டு முயற்சிகளை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினர். இந்திய அரசின் வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் மற்றும் இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து ஜெய்ப்பூர் மற்றும் கோயம்புத்தூரில் நடைபெற்ற மண்டல வளர்ச்சி உச்சிமாநாடுகளைத் தொடர்ந்து இந்த உச்சிமாநாடு நடைபெற்றது.

இது முக்கிய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் மையங்களில் விழிப்புணர்வை வலுப்படுத்துவதோடு, வரும் ஆண்டில் இது போன்ற பல உச்சிமாநாடுகளை நடத்த வால்மார்ட் திட்டமிட்டு உள்ளது.”இன்றைய உலகளாவிய வர்த்தகத்தில் மிகவும் ஆற்றல் வாய்ந்த மற்றும் அற்புதமான வாய்ப்புகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது” என்று வால்மார்ட் இன்க் நிறுவனத்தின் தலைவரும் தலைமை செயல் அதிகாரியுமான ஜான் பர்னர் கூறினார்.

மேலும் அவர் பேசுகையில் “இதுவரை இந்தியாவிலிருந்து 40 பில்லியன் டாலருக்கும் அதிகமான பொருட்களைக் கொள்முதல் செய்துள்ளோம். இந்திய வணிகங்கள் ஏற்றுமதிக்கு முழுமையாக தயாராக இருப்பதை உறுதி செய்வதற்காக, முழுமையான சுற்றுச்சூழல் அமைப்பில் முதலீடு செய்வதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். இது சிறந்த பொருளாதார வாய்ப்புகளை உருவாக்குவதோடு, புதுமையான வணிகங்களை உலகளாவிய சந்தைகளுடன் இணைக்கிறது” என்றார்.

இந்தியாவில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் வளர்ச்சியில் ஒரு முக்கிய மைல்கல்லாக, வால்மார்ட்டின் ‘விருத்தி சப்ளையர் மேம்பாட்டுத் திட்டம்’ 2019-ல் தொடங்கப்பட்டதிலிருந்து நாடு முழுவதும் 1,15,000-க்கும் மேற்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்குப் பயிற்சி அளித்துள்ளதாக மாநாட்டில் அறிவித்தது.

இந்த பயிற்சி அவர்களுக்கு டிஜிட்டல் திறன்கள், முக்கியமான வணிகத் திறன்கள் மற்றும் புதிய சந்தைகளுக்கான வாய்ப்புகளை வழங்கியுள்ளது. 2028-ம் ஆண்டிற்குள் மொத்தம் 1,70,000 சிறு நிறுவனங்களுக்கு ஆதரவளிக்க திட்டமிட்டுள்ள இந்த திட்டம், புதிய சந்தைகளுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்ய விரும்பும் இந்நிறுவனங்களின் திறனை தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது.

மேலும் படிக்க