May 7, 2026
தண்டோரா குழு
இருசக்கர மற்றும் மூன்றுசக்கர வாகன உற்பத்தியில் உலகளவில் முன்னணியில் இருக்கும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் இந்தியாவின் மிகவும் விருப்பத்திற்குரிய குடும்ப எலக்ட்ரிக் வாகனமான டிவிஎஸ் ஐக்யூப் ன் புதிய மாடலான டிவிஎஸ் ஐக்யூப் எஸ் 4.7 கேடபிள்யு ஹச் வேரியண்டை அறிமுகம் செய்துள்ளது.
9 லட்சத்திற்கும் அதிகமான இந்தியக் குடும்பங்களின் பெரும் நம்பிக்கையைப் பெற்றுள்ள டிவிஎஸ் ஐக்யூப், இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனப் பயன்பாட்டை அதிகரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. புதிய டிவிஎஸ் ஐக்யூப் எஸ் 4.7 கேடபிள்யு ஹச் மாடல் ரூ. 1,37,142 விலையில் (மத்திய மற்றும் மாநில அரசின் மானியங்கள் சேர்க்கப்பட்ட டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 175 கி.மீ தூரம் செல்லும்.கண்களைக் கவரும் புத்தம்புதிய வண்ணங்கள் மற்றும் ஒரே சார்ஜிங்கில் அதிக மைலேஜ் வசதியுடன், குடும்பங்கள் அதிக நம்பிக்கையுடனும் எளிதாகவும் நீண்ட தூரம் பயணிக்க இந்த புதிய டிவிஎஸ் ஐக்யூப் எஸ் 4.7 கேடபிள்யு ஹச் மாடல் வழிவகை செய்கிறது. நம்முடைய அன்றாடப் பயன்பாட்டிற்கு ஏற்றவாறு பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள இதில் உள்ள பெரிய பேட்டரி, அன்றாடப் பயணங்கள் மட்டுமின்றி, திட்டமிடப்படாத நீண்ட தூரப் பயணங்களையும் எவ்விதத் தயக்கமுமின்றி மேற்கொள்ள உதவுகிறது.
இப்போது கூடுதல் மைலேஜ் வசதியுடன் ‘மேக்னிஃபிசென்ஸ் பர்ப்பிள் பேஜ்’, ‘ஹார்லெக்வின் ப்ளூ பேஜ்’ மற்றும் ‘டைட்டானியம் க்ரே மேட்’ ஆகிய புதிய வண்ணங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்களின் எதிர்பார்புகளையும் விருப்பங்களையும் புரிந்து கொண்டு, அவற்று ஏற்ற வகையில் தங்களது தயாரிப்புகளை மேம்படுத்தும் டிவிஎஸ் மோட்டாரின் முயற்சியாக, இந்த iQube S வேரியண்ட் மேம்பட்ட 4.7 கேடபிள்யு பேட்டரி திறனுக்கு உயர்த்தப்பட்டுள்ளது.
தற்போது, டிவிஎஸ் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இந்தியா முழுவதும் 1,000-க்கும் மேற்பட்ட நகரங்களில் 3,300 டீலர்ஷிப்களில் கிடைக்கின்றன.