• Download mobile app
06 May 2026, WednesdayEdition - 3738
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வி மூவிஸ் & டிவி; மைக்ரோடிராமா துறையில் தடம் பதிக்கிறது! முதல் சலுகையாக புல்லட் மைக்ரோடிராமா செயலி எந்த விதமான கட்டணமும் இல்லாமல் இலவசமாக வழங்கப்படுகிறது

May 6, 2026 தண்டோரா குழு

ஸ்மார்ட்போன்களில் குறுகிய காலத் தொடர்களாகப் பார்க்கப்படும் கன்டென்ட்களுக்கான அதிகரித்துவரும் தேவையைக் கருத்தில் கொண்டு, இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான வி– ன் கன்டென்ட் அக்ரிகேட்டர் தளமான வி மூவிஸ் & டிவி ‘மைக்ரோடிராமா’ பிரிவில் தனது செயல்பாட்டை அறிவித்துள்ளது.

முதன்முறையாக, புல்லட் மைக்ரோடிராமா ஆப் உடனான கூட்டு செயல்பாட்டின் மூலம் இந்த மைக்ரோடிராமாக்கள் வி மூவிஸ் & டிவி செயலியில் கிடைக்கும். இந்தியாவின் ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களிடையே மைக்ரோடிராமாக்கள் மிக வேகமாகப் பிரபலமடைந்து வருகின்றன. தொழில்முறை அறிக்கைகளின்படி, 2025-ம் ஆண்டின் முதல் காலாண்டில் உலகளவில் பதிவிறக்கம் செய்யப்பட்ட மைக்ரோடிராமா ஆப்ஸ்களில் 11% (35 மில்லியன் பதிவிறக்கங்கள்) இந்தியாவிலிருந்து கிடைத்துள்ளது.

இந்தியாவில் மைக்ரோடிராமா சந்தை 2026-க்குள் 1.5 பில்லியன் டாலராகவும், 2030-க்குள் 4.5 பில்லியன் டாலராகவும் அபரிமிதமான வளர்ச்சியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் அதிகரித்து வரும் இந்த பயன்பாடு, இளைய தலைமுறை மற்றும் மாறிவரும் இத்தகைய பொழுதுப்போக்கு நிகழ்ச்சியைப் பார்க்கும் பழக்கவழக்கங்கள் இந்த வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக அமையும்.

ஒரு நாளைக்கு சராசரியாக 40-90 நிமிடங்கள் வரை மக்கள் இதைப் பார்ப்பதுடன், 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் ஒரு கதையை முழுமையாகப் பார்த்து முடிக்கின்றனர் என்பது இத்துறையின் வலுவான வரவேற்பைக் காட்டுகிறது.இந்த மைக்ரோடிராமா அறிமுகமானது, தனது ‘இலவச பொழுதுப்போக்கு நிகழ்ச்சிகளை வலுப்படுத்துவதில் வி நிறுவனம் கொண்டுள்ள கவனத்தை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

இதன் மூலம், வி மூவிஸ் & டிவி சந்தாதாரர்கள் தனித்தனி சந்தாக்களைப் பராமரிக்கும் சிரமம் எதுவுமில்லாமல், ஒரே தளத்தில் ஜியோஹாட்ஸ்டார் சோனிலிவ் அமேசான் எம்எக்ஸ் பிளேயர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட ஓடிடி தளங்களின் இலவச மற்றும் பிரீமியம் கன்டென்ட்களையும், 400-க்கும் மேற்பட்ட நேரலை டிவி சேனல்களையும் கண்டு ரசிக்கலாம்.

வி மூவிஸ் & டிவி-இல் உள்ள மைக்ரோடிராமா பட்டியலில் காதல், நாடகம், த்ரில்லர் மற்றும் நகைச்சுவை எனப் பல்வேறு பிரிவுகளில் பலமொழித் தலைப்புகள் இடம்பெறும். இதில் ரிக்ஷா ரோமியோ – இந்தி மற்றும் ஆங்கிலம்), ஆட்டோராஜா – தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் ஆங்கிலம்), லேடி பாஸ் – தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஆங்கிலம்), காமெடி கப்பிள் – இந்தி மற்றும் ஸ்வீட் 16 (பெங்காலி) போன்ற பல பிராந்திய மொழித் தொடர்கள் வாடிக்கையாளர்களின் ரசனைக்கு ஏற்ப வழங்கப்படுகின்றன.இந்தத் தொடக்கத்தின் மூலம், வி நிறுவனம் மாறிவரும் வாடிக்கையாளர் விருப்பங்களுக்கு ஏற்ப, ஒரே தளத்தின் கீழ் பல்வேறு பொழுதுபோக்கு வடிவங்களை வழங்கும் ஒரு சிறந்த பொழுதுப்போக்கு ஒருங்கிணைப்பு தளமாக தனது நிலையை மேலும் வலுப்படுத்துகிறது.

மேலும் படிக்க