• Download mobile app
08 Aug 2026, SaturdayEdition - 3832
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் முதல் முறையாக “CSI Edu Connect 2026” கல்வி மற்றும் வேலைவாய்ப்பு விழா

April 30, 2026

கோவையில் முதல் முறையாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக “CSI Edu Connect 2026” என்ற கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி வரும் மே 2-ஆம் தேதி நடைபெறுகிறது.

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள சிஎஸ்ஐ ஆல்சோல் சர்ச் வளாகத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் மாணவர்களின் கல்வி முன்னேற்றம், வேலைவாய்ப்பு வாய்ப்புகள் மற்றும் தனிநபர் வளர்ச்சி குறித்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன.

இந்த நிகழ்ச்சிக்கான போஸ்டர் வெளியீட்டு விழா கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தென்னிந்திய திருச்சபை (CSI) கோவை திருமண்டல அலுவலகத்தில் நடைபெற்றது. விழாவில் தென்னிந்திய திருச்சபை கோவை திருமண்டல பிஷப் பிரின்ஸ் கால்வின் போஸ்டரை வெளியிட்டார்.நிகழ்ச்சியில் சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரி இயக்குநர் டாக்டர் அருமைராஜ், பொருளாளர் அமிர்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கல்வி சொற்பொழிவாளர் ஜெயபிரகாஷ் காந்தி பங்கேற்று, கல்லூரி மாணவர்களுடன் நேரடியாக கலந்துரையாட உள்ளார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிஷப் பிரின்ஸ் கால்வின் கூறுகையில்,

கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் சிஎஸ்ஐ திருச்சபை தொடர்ந்து கல்விச் சேவையில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார். குறிப்பாக மலைவாழ் மக்கள் மற்றும் இருளர் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் பெற உதவித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக கூறினார்.

மேலும், “CSI Edu Connect 2026” நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். மாணவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் வாழ்க்கை முன்னேற்றம் தொடர்பான வழிகாட்டுதல்களை வழங்கும் நோக்கில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுவதாக தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் மலைவாழ் மக்கள் மற்றும் இருளர் சமூகத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் பங்கேற்று பயனடைவார்கள் என்றும், அனைத்து மதத்தினரும் இதில் இலவசமாக கலந்து கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க