• Download mobile app
13 Apr 2026, MondayEdition - 3715
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை லட்சுமி மில்ஸ் பகுதியில் டிரினிட்டி கண் மருத்துவமனையின் புதிய கிளை தொடக்கம்

April 13, 2026 தண்டோரா குழு

கண் மருத்துவச் சேவையில் முன்னணி வகிக்கும் ‘டிரினிட்டி கண் மருத்துவமனை & லாசிக் மையம்’,கோவை லட்சுமி மில்ஸ் பகுதியில் தனது புதிய கிளையை இன்று தொடங்கியுள்ளது.

விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கோவை ‘ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை லிமிடெட்’ நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் கே. மாதேஸ்வரன் கலந்து கொண்டு இம்மையத்தை திறந்து வைத்தார். லேசர் மூலம் பார்வை திருத்தும் லாசிக் சிகிச்சை மற்றும் நவீன அறுவை சிகிச்சை அரங்கம் உள்ளிட்ட அதிநவீன வசதிகளுடன் இம்மையம் அமைக்கப்பட்டுள்ளது.

பாலக்காட்டை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்நிறுவனம், 27 ஆண்டுகளுக்கும் மேலாக கண் மருத்துவத் துறையில் சேவையாற்றி வருகிறது.1999-ஆம் ஆண்டு ‘டிரினிட்டி மருத்துவ மையம்’ என்ற பெயரில் தொடங்கப்பட்ட இது, 2009-ஆம் ஆண்டு சிறப்பு கண் மருத்துவமனையாக விரிவடைந்தது. தற்போது,புதியதாக லட்சுமி மில்ஸ் கிளையையும் சேர்த்து மொத்தம் ஒன்பது மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

டாக்டர் ஏ.கே.ஸ்ரீதரன் (தலைவர்), டாக்டர் சுனில் ஸ்ரீதர் (நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர்), டாக்டர் மிருதுலா சுனில் (தலைமை மருத்துவ இயக்குநர்) ஆகியோர் தலைமையில் இம்மருத்துவமனை நிர்வகிக்கப்படுகிறது.

6,500 சதுர அடியில் அமைந்துள்ள இக்கிளையில் நோயாளர் பதிவு பிரிவு, மேம்பட்ட நோயறிதல் வசதிகள், ஆலோசனை அறைகள், மருந்தகம், கண்ணாடி விற்பனை நிலையம் மற்றும் லாசிக் சிகிச்சைக்கான தனிப்பட்ட அறுவை சிகிச்சை அரங்கம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அனுபவமிக்க கண் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்கள் குழுவின் கீழ் சேவைகள் வழங்கப்படுகின்றன.

கோவை மையத்தில் டாக்டர் மதுசூதன் R.J, டாக்டர் முகமது ஷாபாஸ், டாக்டர் ஏ.எம். மும்தாஸ், டாக்டர் பிரேம்ஜித் முரளிதரன், டாக்டர் ஜின்சி மரியா பால், டாக்டர் சிந்து ஜா முருகேசன், டாக்டர் சஞ்சனா எஸ். ஸ்ரீதர் உள்ளிட்ட நிபுணர்கள் பணியாற்றுகின்றனர்.

கண்புரை,ஒளிவிலகல் சிகிச்சை, லாசிக், கார்னியா, விழித்திரை, கண்ணழுத்த நோய், குழந்தைகள் கண் மருத்துவம், நரம்பியல் கண் மருத்துவம், கண் சீரமைப்பு அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.

புதிய கிளை தொடக்கத்தை முன்னிட்டு ஜூன் 15 வரை சிறப்புச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இலவச கண் பரிசோதனை ஆலோசனை, இலவச லாசிக் பரிசோதனை, லாசிக் அறுவை சிகிச்சைக்கு 25 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகின்றன. மேலும், குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் 5 நபருக்கு இலவச லாசிக் சிகிச்சை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் சுனில் ஸ்ரீதர் கூறியதாவது: கண் ஆரோக்கியம் வாழ்க்கைத் தரத்தை நிர்ணயிக்கும் முக்கிய அம்சமாகும். கோவையில் தொடங்கப்பட்டுள்ள புதிய மையத்தின் மூலம் உலகத் தரமான கண் சிகிச்சையை அனைவருக்கும் எளிதில் வழங்குவதே எங்கள் நோக்கம். கண்ணாடி தேவையற்ற தெளிவான பார்வையை வழங்கி, மக்கள் நம்பிக்கையுடன் வாழ உதவுவதே எங்கள் குறிக்கோள் என்றார்.

மேலும் படிக்க