April 11, 2026
தண்டோரா குழு
தமிழ்நாட்டின் புகழ்பெற்ற இனிப்பு மற்றும் காரவகைகள் நிறுவனமான ஸ்ரீ ஆனந்தாஸ் ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ், திருச்சியின் மையப்பகுதியான 11வது குறுக்கு தெருவில் தில்லை நகரில் தனது முதல் கிளையைத் தொடங்கியுள்ளது.
புதிய கிளை துவக்கம் குறித்து ஆனந்தாஸ் ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மணிகண்டன் கூறுகையில்,
ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் தரமான மற்றும் நினைவில் நிற்கும் சுவையை வழங்குவதே எங்கள் முக்கிய குறிக்கோள். திருச்சி மக்களுக்கு எங்கள் சிறந்த தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம், என்றார்.
1998-ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் ஒரு சிறிய சைவ உணவகமாகத் தொடங்கப்பட்ட ஸ்ரீ ஆனந்தாஸ், தற்போது தென்னிந்திய இனிப்பு மற்றும் காரவகைகளில் நம்பிக்கைக்குரிய நிறுவனமாக குறிப்பிடத்தக்க வளர்ச்சி பெற்றுள்ளது. தற்போது கோயம்புத்தூரில் 20-க்கும் மேற்பட்ட கிளைகளையும், சென்னையில் பல கிளைகளையும் வெற்றிகரமாக நடத்தி வருகிறது.
ஸ்ரீ ஆனந்தாஸ் ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் என்.வி. நம்மாழ்வார் கூறுகையில்:
“பாரம்பரிய சுவைகளை அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் லட்சியத்துடன் பயணித்து வருகிறோம். கோயம்புத்தூர் மற்றும் சென்னையில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், தற்போது திருச்சியிலும் எங்கள் சேவையை வழங்குவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம். திருச்சி மக்களிடம் இருந்தும் எங்களுக்குச் சிறப்பான வரவேற்பு கிடைக்கும் என உறுதியாக நம்புகிறோம்”.
ஸ்ரீ ஆனந்தாஸில் பாதாம் ரோஸ் லட்டு, குல்கந்த் பிஸ்கட் போன்ற நவீன இனிப்புகளுடன், கோவில்பட்டி கடலை மிட்டாய் மற்றும் இளநீர் ஹல்வா போன்ற பாரம்பரியச் சிறப்பு வகைகளும் இணைந்து, மொத்தம் 200-க்கும் மேற்பட்ட வகைகள் நாள்தோறும் புத்தம் புதியதாகத் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.
வாடிக்கையாளர்களின் நம்பிக்கையும் ஆதரவையும் தொடர்ந்து பெற்று வரும் இந்த நிறுவனம், விசேஷங்கள் மற்றும் இல்ல விழாக்களுக்கான ஸ்பெஷல் ஆர்டர்களையும் ஏற்று, அவற்றை சிறந்த சேவையுடன் வழங்கி வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய கிளையின் தொடக்கம் நிறுவனத்தின் விரிவாக்கத் திட்டத்தின் ஒரு முக்கிய பகுதியாக அமைந்துள்ளது. விரைவில் ஈரோடு மற்றும் மதுரை நகரங்களிலும் புதிய கிளைகள் தொடங்கப்பட உள்ளன. மேலும், பாலக்காடு கிளையின் வெற்றியைத் தொடர்ந்து, கேரள மாநிலத்தின் கொச்சியிலும் விரிவாக்கம் மேற்கொள்ளப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.