• Download mobile app
04 Jul 2026, SaturdayEdition - 3797
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டிபிஎஸ் வங்கி இந்தியா தனிநபர்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான நேரடி வரி செலுத்தும் வசதியைத் தொடங்கியது

March 31, 2026 தண்டோரா குழு

மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் அனுமதியைத் தொடர்ந்து, நேரடி வரி செலுத்தும் வசதியை அறிமுகப்படுத்துவதாக டிபிஎஸ் வங்கி இந்தியா அறிவித்துள்ளது.

இது குறித்து டிபிஎஸ் வங்கி இந்தியாவின் நிர்வாக இயக்குநர் மற்றும் உலகளாவிய பரிவர்த்தனை சேவைகள்,பெருநிறுவன வங்கி – நிதி நிறுவனங்கள் மற்றும் சிறு, நடுத்தர நிறுவனங்கள் பிரிவுக்கான தலைவருமான திவ்யேஷ் தலால் –கூறுகையில்,

நேரடி வரி செலுத்தும் வசதி அளிக்க டிபிஎஸ் வங்கி இந்தியாவிற்கு கிடைத்திருக்கும் இந்த அனுமதி, பரிவர்த்தனை வங்கிச் சேவை, பணம் செலுத்துதல் மற்றும் டிஜிட்டல் முறையில் பணத்தை நிர்வகித்தல் ஆகியவற்றில் டிபிஎஸ் வங்கி இந்தியாவின் நம்பகமான திறனை மேலும் அதிகரித்துள்ளது. மேலும், இது மறைமுக வரிகள் மற்றும் நேரடி வரிகள் என இரண்டையும் செலுத்துவதில் வாடிக்கையாளர்களின் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்ய எங்களுக்கு உதவுகிறது.

ஏற்கனவே சரக்கு மற்றும் சேவை வரிக்கான கட்டணங்களை வசூலிக்கும் அனுமதியைப் பெற்றுள்ள இந்த வங்கி, இனி டிஐஎன் 2.0 தளம் வழியாக நேரடி வரிகளையும் வசூலிக்க முடியும். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் வருமான வரி , முன்கூட்டிய வரி, சுய மதிப்பீட்டு வரி, மூலதன ஆதாய வரி மற்றும் நேரடி வரி பிடித்தம் ஆகியவற்றை தங்களது வங்கி கணக்கிலிருந்தே எந்தவித தடைகளும் இல்லாமல் செலுத்தலாம்.

டிஐஎன் 2.0 போன்ற டிஜிட்டல் உள்கட்டமைப்புகளின் பரவலான பயன்பாட்டினால், வரி செலுத்தும் முறை எளிதாக்கப்பட்டு, செயல்பாட்டுத் தவறுகள் நடப்பதற்கான வாய்ப்புகள் வெகுவாக குறைந்துள்ளன. இதன் மூலம் வரி செலுத்துவதற்கான சூழல் மிகவும் சாதகமாக மாறியுள்ளது. டிபிஎஸ் வங்கி இந்தியா, தனது டிஜிட்டல் வங்கி தளங்கள் வழியாக நேரடி வரி செலுத்த வழிவகை செய்கிறது.

சில்லறை வாடிக்கையாளர்கள் ‘டிஜிபேங்க் பை டிபிஎஸ்’ செயலி மூலமும், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் முதல் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் வரை அனைத்து வணிக அமைப்புகளும் ‘டிபிஎஸ் ஐடியல்’) தளம் மூலமும் வரி செலுத்தலாம். இந்திய ரிசர்வ் வங்கி வழங்கிய ‘ஏஜென்சி அங்கீகாரத்தைத் தொடர்ந்து இந்த வசதியை டிபிஎஸ் இந்தியா வங்கி தொடங்கியுள்ளது. இது டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பைப் பயன்படுத்தி புத்திசாலித்தனமான, வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கேற்ற வங்கி தீர்வுகளை வழங்குவதில் டிபிஎஸ் வங்கி இந்தியாவின் பங்களிப்பை மேலும் வலுப்படுத்துகிறது.

இணையவழி வங்கிச்சேவை அல்லது நேஃப்ட்/ஆர்டிஜிஎஸ் முறையைப் பயன்படுத்தி டிபிஎஸ் டிஜிட்டல் தளங்கள் வாயிலாகவோ அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட டிபிஎஸ் வங்கி கிளைகளுக்கு நேரில் சென்றோ வரிகளைச் செலுத்தலாம். வாடிக்கையாளர்கள் வரி செலுத்தியதை உடனடியாக உறுதிப்படுத்தும் வசதி டிஐஎன் 2.0 முறை மூலம் சலான் பதிவிறக்கம் மற்றும் கட்டணம் செலுத்தியதன் நிலை குறித்த தகவல் போன்ற வசதிகளைப் பெறலாம். பலமுறை அல்லது அதிகத்தொகை அளவில் வரி செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு, வரி செலுத்தும் நிலையைத் துல்லியமாகக் கண்காணிக்கும் வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.

மேலும் படிக்க