• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

CAHOCON 2026 மாநாட்டிற்கு முன்னோட்டமாக கேஎம்சிஹெச் மருத்துவமனையில் டிஜிட்டல் மருத்துவ சேவை குறித்த சிறப்பு பயிலரங்கு

March 24, 2026 தண்டோரா குழு

மருத்துவத் துறையில் டிஜிட்டல் புரட்சி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் கேஎம்சிஹெச் மருத்துவமனை சார்பில் கோயம்புத்தூர் லீ மெரிடியன் ஹோட்டலில் உயர்மட்டப் பயிலரங்கு ஒன்று நடைபெற்றது.

“புதிய டிஜிட்டல் மருத்துவ சேவை: செயற்கை நுண்ணறிவு,சைபர் பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு (DPDP)” என்ற தலைப்பில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இது குறித்து கேஎம்சிஹெச் செயல் இயக்குனர் டாக்டர் அருண் பழனிசாமி விளக்குகையில்,மருத்துவ நிறுவனங்கள் தற்போது எதிர்கொள்ளும் மூன்று முக்கிய சவால்களை இந்த பயிலரங்கு மையமாகக் கொண்டுள்ளது என்றார்.

(1)செயற்கை நுண்ணறிவை நடைமுறையில் எவ்வாறு பயன்படுத்துவது?
(2)மருத்துவமனைகள் சந்திக்கும் சைபர் பாதுகாப்பு சவால்கள் என்ன?
(3) விதிமீறல்களுக்கு கோடி கணக்கில் அபராதம் விதிக்க வாய்ப்புள்ள “டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு (DPDP) சட்டம்”.

CAHOCON 2026 முன்னோட்டமாக நடக்கும் இந்த நிகழ்வு, வரும் ஏப்ரல் 10 முதல் 12 வரை சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறவுள்ள 10-வது ‘CAHOCON 2026’ மற்றும் தெற்காசியாவிற்கான முதல் ‘ISQua’ மண்டல மாநாட்டிற்கான அதிகாரப்பூர்வத் தொடக்கமாகும். இந்த மாநாடு “தொழில்நுட்பம், அக்கறை மற்றும் நம்பிக்கை – புதிய மருத்துவ விதிமுறை” என்ற கருப்பொருளில் நடைபெறுகிறது. இதில் சுமார் 2,500-க்கும் மேற்பட்ட உலகளாவிய பிரதிநிதிகள் மற்றும் மருத்துவத் தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேஎம்சிஹெச் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் நல்லா ஜி. பழனிசாமி தலைமையில் இந்த மாநாடு நடைபெறுகிறது.இந்த பயிலரங்கில் துறைசார் வல்லுநர்கள் பல்வேறு தலைப்புகளில் உரையாற்றினர். கேஎம்சிஹெச் கதிரியக்கத் துறைத் தலைவர் டாக்டர் மேத்யூ செரியன் கதிரியக்கத் துறையில் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு குறித்து விளக்கினார்.

கேஎம்சிஹெச் கதிர்வீச்சு புற்றுநோயியல் நிபுணர் டாக்டர் ஆர்.சுப்ரமணியம் புற்றுநோய் சிகிச்சையில் செயற்கை நுண்ணறிவு எவ்வாறு துல்லியத்தை மேம்படுத்துகிறது என்பது பற்றிப் பேசினார்.
கார்த்தி புருஷோத்தமன் முதன்மை நிர்வாக அதிகாரி,1 ஹேட் சொலூஷன்ஸ்(1Hat Solutions),உலகளாவிய மருத்துவத் துறை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இந்தியாவின் முன்னணிப் பயணம் குறித்துப் பேசினார்.

பிஜு வேலாயுதன்,முதன்மை தகவல் அதிகாரி, குப்புசாமி நாயுடு மருத்துவமனை நோயாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் டிஜிட்டல் கருவிகளின் பங்கு குறித்து விளக்கினார்.அருணாச்சலம், இயக்குனர், நைன்த் டைமென்ஷன் (Ninth Dimension), டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நோயாளிகளின் தரவை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து உரையாற்றினார்.

ரவிசங்கர்,இயக்குனர்,ஆயோஸ்டா இந்தியா ( Aosta India), மருத்துவத் துறையில் அதிகரித்து வரும் சைபர் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்வது குறித்து விளக்கினார்.

கேஎம்சிஹெச் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் நல்லா ஜி. பழனிசாமி பேசுகையில்,

மருத்துவத் துறையில் சிறந்து விளங்க செயற்கை நுண்ணறிவுவைப் பயன்படுத்துவது இனி ஒரு விருப்பம் அல்ல, அது ஒரு கட்டாயம் என்று குறிப்பிட்டார். கோயம்புத்தூர் மருத்துவப் புதுமைகளின் முக்கிய மையமாகத் திகழ்வதை இந்த முகாம் உறுதிப்படுத்துகிறது என்றார்.

இந்த நிகழ்வில் கேஎம்சிஹெச் முதன்மை செயல் அதிகாரி டாக்டர் சிவகுமரன் வரவேற்புரை ஆற்றினார். CAHOCON திட்ட நிர்வாகி ரபீனா நன்றியுரை வழங்கினார்.

மேலும் படிக்க