• Download mobile app
17 Mar 2026, TuesdayEdition - 3688
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விஐடி மொரீஷியஸ் சார்பில் தொழில்நுட்ப ஐடியாத்தான் போட்டி -5 நாடுகளை சேர்ந்த 1600 பேர் பங்கேற்பு

March 17, 2026 தண்டோரா குழு

விஐடி மொரீஷியஸ் சார்பில் தொழில்நுட்ப ஐடியாத்தான் போட்டி இணையவழியில் நடத்தப்பட்டது.இந்த நிகழ்வு பொறியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் நிறுவனத்துடன் இணைந்து நடத்தப்பட்டது. இதில், உலகம் முழுவதும் இருந்து 3,500-க்கும் மேற்பட்ட புதுமை யோசனைகள் சமர்ப்பிக்கப்பட்டன.

இரண்டு நாள் நிகழ்வில் மொரீஷியஸ், இந்தியா, மலேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய 5 நாடுகளைச் சேர்ந்த 297 கல்வி நிறுவனங்களில் இருந்து 1,612 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர்.
உலகளாவிய ஒத்துழைப்பு, புத்தாக்கத்தையும் ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற ஐடியாத்தான் போட்டியில் இறுதிச் சுற்றில் 200 அணிகள் தொழில்முறை வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்களைக் கொண்ட நடுவர் குழுவிடம் தங்கள் படைப்புகளை வழங்கினர்.

மேலும், 2026 ஆம் ஆண்டுக்கான இளநிலை பொறியியல் (B.Eng. Hons) பட்ட படிப்புகளுக்கான கல்வி உதவித்தொகை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும் படிக்க