March 2, 2026
தண்டோரா குழு
கோயம்புத்தூர் மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், சோமையம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் முப்பெரும் விழா இன்று நடைபெற்றது.
இப்பள்ளியின் நூற்றாண்டு விழா பள்ளி நூற்றாண்டு நினைவு கட்டிடங்கள் திறப்பு விழா மற்றும் பள்ளி கட்டிடங்களை கட்டித் தந்த அனன்யா குழுமத்திற்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவிற்கு முதன்மை விருந்தினராக கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பவன்குமார் ஜி கிரியப்பனவர் கலந்து கொண்டு பள்ளி கட்டிடங்களை திறந்து வைத்து,கல்வி மலர் புத்தகத்தை வெளியிட்டு நன்கொடையாளர்களை பாராட்டி னார்.
சிறப்பு விருந்தினராக கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் கலந்து கொண்டார்.மேலும் விழாவில் கோயம்பததூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரா.பாலமுரளி கலந்துகொண்டார்.விழாவிற்கு பள்ளியின் மேனாள் தலைமை ஆசிரியரும் பள்ளியின் மூத்த மாணவருமான உயர்திரு பொ. ராமலிங்கம் தலைமை வகித்தார்.
விழாவிற்கு வந்திருந்தவர்களை பள்ளியின் ஆசிரியர் மா.சுகுணா வரவேற்று பேசினார்.
விழாவில் ஏற்புரையாற்றிய அனன்யா குழுமத்தின் இணை நிர்வாக இயக்குனர் உமா மகேஸ்வரி யுவராஜ் :-
அனன்யா குடும்பத்தின் சார்பில் மூத்த குடிமக்களுக்கு எண்ணற்ற சேவைகளையும், அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருவதில் இந்தியாவிலேயே முன்னணி நிறுவனமாக அனன்யா குழுமம் இருப்பதில் பெருமை கொள்கிறோம்.நாம் வாழும் இந்த சமுதாயத்திற்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்ற கருத்தில் கோயம்புத்தூர் மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், சோமையம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு எங்களது பெரு நிறுவன சமூகப் பொறுப்புணர்வு மூலம் இப்பள்ளியின் ரூபாய் 75 லட்சம் மதிப்பில் கட்டிடங்களை புணரமைத்தும் உணவுக்கூடத்தை உணரமைத்தும் கொடுத்துள்ளோம்.
இங்கு பயிலும் மாணவர்கள் நல்ல முறையில் பயின்று வரும் காலங்களில் மிகப்பெரிய அரசு பணிகளிலும், தொழிலதிபர்களாகவும், விஞ்ஞானிகளாகவும் வர வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். இனிவரும் காலங்களில் அனைத்து விதமான உதவிகளும் செய்ய நாங்கள் தயாராக உள்ளோம். இங்குள்ள மாணவர்கள் இப்பள்ளியின் வளத்தையும் சுற்றுப்புற சூழலையும் முறையாக பராமரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் விழாவில் கோயம்பத்தூர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் பெ. இரவிச்சந்திரன்,பெரியநாயக்கன்பாளையம் வட்டார கல்வி அலுவலர் – I, இரா ராஜேந்திரன்,வட்டார கல்வி அலுவலர் II, சி.இராஜம்மாள், பேரூர் துணை கண்காணிப்பாளர், கே.செல்லதுரை மற்றும் வடவள்ளி, காவல் ஆய்வாளர்,கே. பி.சாரதா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
விழா முடிவில் பள்ளி ஆசிரயர் எஸ் ஆரோக்கியதாஸ் நன்றி உரையாற்றினார்.
இதைத்தொடர்ந்து மாலை பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழாவும் நடைபெற்றது.விழாவில் ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் ஊர் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.