January 28, 2026
தண்டோரா குழு
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அகில இந்திய தலைவர் Er.சையத் சஆததுல்லாஹ் ஹுசைனி கோவை வருகையையொட்டி நடத்தப்பட்ட இந்த கலந்துரையாடல், சமூக ஒற்றுமை, பரஸ்பர மரியாதை மற்றும் பொது நலனுக்கான கூட்டு செயற்பாடுகளின் அவசியத்தை வலியுறுத்தும் முக்கிய மேடையாக அமைந்தது.
இந்நிகழ்வில்,ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழ்நாடு மாநிலத் தலைவர் மௌலவி. முஹம்மது ஹனீபா மன்பஈ,யுனிவர்சல் பீஸ் ஃபவுன்டேஷன் நிறுவனர் சிவாத்மா குருஜி, ரோமன் கத்தோலிக் சர்வ சமய பொறுப்பாளர் அருட்தந்தை தன்ராஜ், குருத்வாரா சபையின் சார்பில் டோனி சிங் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
மேலும்,ஜெயின் சமூகத்தின் சார்பில் அரவிந்த் சார் ஜெயின், TASK அமைப்பின் தலைவர் குருதீப் சிங் ஆனந்த், RAAC அமைப்பின் செயலாளர் ரவீந்திரன், யுனிவர்சல் ப்ரதர்ஹுட் அமைப்பின் சார்பில்
வழக்கறிஞர் நந்தகுமார் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரைகள் வழங்கினர்.
CSI திருப்பள்ளியைச் சேர்ந்த அருட்தந்தை கருணாகரன், திவ்யோதயா இயக்குனர் அருட்தந்தை வில்சன்,சிறுதுளி அமைப்பின் சார்பில் சின்னசாமி,ஓசை அமைப்பின் சார்பில் சையத்,பசுமைக் தாயகம் அமைப்பின் சார்பில் ராஜேந்திரன் ஆகியோரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இதனுடன், கேசமூக செயற்பாட்டாளர்களான
சிராஜ், மேட்டுப்பாளையம் மணி,ஜவஹர் உள்ளிட்டோரும்,TELC, ரிதம் அமைப்புகளின் பிரதிநிதிகளும், பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரிகளின் முதல்வர்கள், தாளாளர்கள் உள்ளிட்டகல்வியாளர்களும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
இந்நிகழ்விற்கு,ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்
கோவை பெருநகரத் தலைவர் P.S. உமர் ஃபாரூக் தலைமை வகித்தார்.நிகழ்வை ஆசிரியர் சலீம் வழிநடத்தினார்.
நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பை
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை மக்கள் தொடர்பு செயலாளர் அப்துல் ஹக்கீம் மேற்கொண்டார்.நிகழ்வில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மாநில, மாவட்டப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த கலந்துரையாடல், மதங்களுக்கிடையேயான உரையாடலை கருத்தரங்க மட்டத்தில் இருந்து
நடைமுறை சமூக செயற்பாடுகளுக்கு கொண்டு செல்லும் ஒரு முக்கிய தொடக்கமாக அமைந்தது.கோவையில் சமூக நல்லிணக்கப் பேரவை உருவாக்கம் குறித்த ஒற்றுமையான குரல்,எதிர்காலத்தில் அமைதி, சமூக நீதி மற்றும் பொது நலன் சார்ந்த கூட்டு முயற்சிகளுக்கான வலுவான அடித்தளத்தை உருவாக்கியதாக பங்கேற்பாளர்கள் கருத்துத் தெரிவித்தனர்.