January 28, 2026
தண்டோரா குழு
கோவை ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள புதிய எம்.எஸ்.ஆர் வளாகத்தில், சூயஸ் நிறுவனம் 77-வது குடியரசு தினத்தை கோலாகலமாக கொண்டாடியது.
இந்த நிகழ்ச்சிக்கு அசோசியேஷன் ஆப் அலையன்ஸ் கிளப்ஸ் இன்டர்நேஷனல் அமைப்பின் முன்னாள் மாவட்ட ஆளுநரான ஏ.ஜி.ஏ அலி என்.ராஜன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
இதில் இந்நிறுவன ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் சூயஸ் இந்தியா நிறுவனத்தின் கோவை 24×7 குடிநீர் வினியோக திட்ட இயக்குனர் சங்கராம் பட்நாயக் பேசுகையில்,
ஒரு சிறந்த தேசத்தை உருவாக்குவதில் தூய்மை, ஒழுக்கம் மற்றும் நிலையான நடைமுறைகள் அவசியம் என்றார். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, ‘கிளீன் டச் பெசிலிட்டிஸ்’ நிறுவனத்தின் பாதுகாவலர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. மேலும், தேசபக்தியை ஊட்டும் வகையில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
இறுதியாக, கிளீன் டச் பெசிலிட்டிஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கே.ஏ. அனீஷ் நன்றியுரை ஆற்றினார். அப்போது, தரமான சேவை மற்றும் சமூக நலனில் தங்கள் நிறுவனம் கொண்டுள்ள உறுதிப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.