December 6, 2025
தண்டோரா குழு
பி.எஸ்.ஜி மருத்துவமனையின் உணவியல் துறை சார்பில்,புற்றுநோய்க்கான ஊட்டச்சத்தையும் நோயாளிகள் பராமரிப்பையும் மேம்படுத்தும் நோக்குடன் ஃப்ரம் பெஞ்ச் டூ பெட்சைட் என்ற தலைப்பில் சர்வதேச கருத்தரங்கு நடைபெற்றது.புற்றுநோய் சிகிச்சையில் ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் அதிகரித்து வருவதை இந்தக் கருத்தரங்கு வலியுறுத்தியது.
நிபுணர்கள் சங்கமம் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து புற்றுநோயியல், உணவியல் துறை, அறுவை சிகிச்சை மற்றும் கதிர்வீச்சு சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்ற வல்லுநர்கள் இந்தக் கருத்தரங்கில் பங்கேற்றனர். மேலும், 200-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், உணவியல் நிபுணர்கள், மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த மாநாடு பி.எஸ்.ஜி அண்ட் சன்ஸ் சாரிட்டீஸ் நிறுவனத்தின் நிர்வாக அறங்காவலர் எல். கோபாலகிருஷ்ணன் தலைமையின் கீழ் நடைபெற்றது. பி.எஸ்.ஜி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் ஜே.எஸ் புவனேஸ்வரன், பி.எஸ்.ஜி புற்றுநோயியல் நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் டி. பாலாஜி உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் இந்நிகழ்வுக்கு ஆதரவளித்தனர். இந்தக் கருத்தரங்கை முதன்மை உணவியல் ஆலோசகர் டாக்டர் கவிதா மற்றும் அவரது குழுவினர் ஒருங்கிணைத்திருந்தனர்.
டிச.5ம் தேதி பி.எஸ்.ஜி லேபில் பயிற்சிப் பட்டறை நடைபெற்றது.நடைமுறை அடிப்படையிலான கற்றல் மற்றும் செயல்முறை அனுபவத்துடன் நடைபெற்ற இதில் 70 பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
சர்வதேச அமர்வுகள் டிச.6 ம் தேதி தேசிய மற்றும் சர்வதேச பேச்சாளர்களுடன் அறிவியல் அமர்வுகள் நடைபெற்றன. இதில்
பி.எஸ்.ஜி புற்றுநோயியல் நிறுவனத்தின்
புற்றுநோய் அறுவை சிகிச்சை டாக்டர் கே.எஸ். ராஜ்குமார்,குழந்தை புற்றுநோயியல் ஆலோசகர் டாக்டர் சஷி ரஞ்சனி,டாக்டர் சாந்தி தண்டபாணி,
அப்பல்லோ குழந்தைகள் மருத்துவமனை
டாக்டர் லேகா ஸ்ரீதரன், முதன்மை கதிர்வீச்சு புற்றுநோயியல் நிபுணர் டாக்டர் மது சாய்ராம்,டாக்டர்கள் ஜோதி கிருஷ்ணன்,டாக்டர் அரவிந்த் கிருஷ்ணமூர்த்தி,டாக்டர் கவிதா,டாக்டர் பாலு,டாக்டர் ஹிமால் தேவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
டாக்டர் கவிசங்கர், டாக்டர் சுனிதா பிரேமலதா, டாக்டர் அநுஜா பாணிக்கர், டாக்டர் சுபாஷினி,மற்றும் டாக்டர் ராமமூர்த்தி ஆகியோர் குழு உறுப்பினர்களாக பங்கேற்றனர்.