December 6, 2025
தண்டோரா குழு
கோவையில் நடைபெற்ற 37 வது மாவட்ட அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
கராத்தே கோயமுத்தூர் சங்கம் சார்பாக மாவட்ட அளவிலான கராத்தே போட்டி கோவை இந்துஸ்தான் கல்வி வளாகத்தில் நடைபெற்றது.இரண்டு நாட்கள் நடைபெற உள்ள இதில்,ஆறு வயது முதல் 18 வயது வரையிலான பள்ளி கல்லூரி மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
வயது மற்றும் எடைப்பிரிவுகளில், கட்டா மற்றும் குமித்தே ஆகிய போட்டிகள் நடைபெற்றன.மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டியில் கோவை,மற்றும் பொள்ளாச்சி கல்வி மாவட்டங்களில் இருந்து பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றனர்.
இதில் வெற்றி பெறும் வீரர்,வீராங்கனைகள் மாநில அளவிலான போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட இருப்பதாக போட்டி ஒருங்கிணைப்பாளர் வீரமணி தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர்,தமிழக அரசு தொடர்ந்து விளையாட்டு வீரர்கள் ஊக்குவித்து வருவதாக கூறிய அவர்,இதனால் தேசிய,சர்வதேச போட்டிகளில் தமிழக மாணவர்கள் பங்கேற்பது அதிகரித்துள்ளதாக அவர் கூறினார்…