• Download mobile app
05 Dec 2025, FridayEdition - 3586
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஸ்கோடா ஆட்டோ இந்தியா, இந்திய சந்தையில் 25வது ஆண்டில், 5 இலட்சத்திற்கும் மேற்பட்ட விற்பனை சாதனையை கடந்தது

December 5, 2025 தண்டோரா குழு

ஸ்கோடா ஆட்டோ இந்தியா இந்தியாவில் தனது வளர்ச்சி வேகத்தைத் தொடர்ந்து, சந்தையில் நுழைந்ததிலிருந்து 5 லட்சம் யூனிட் விற்பனையை கடந்த முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது.

தன் வெள்ளி விழா ஆண்டில், இந்த பிராண்டு ஏற்கனவே பல மாதாந்திர, காலாண்டு மற்றும் ஆண்டு மைல்கற்களை கடந்துள்ளது. 2025 ஆம் ஆண்டின் இறுதி மாதத்திற்கு முந்தைய மாதமான நவம்பரில், இந்த பிராண்டு இந்தியாவில் 5,491 யூனிட்களை விற்பனை செய்து, கடந்த ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது 90% ஒய் – ஓ – ஒய் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

வளர்ச்சி குறித்து கருத்து தெரிவிக்கும் போது, ஸ்கோடா ஆட்டோ இந்தியாவின் பிராண்டு டைரக்டர் அஷீஷ் குப்தா கூறியதாவது,

“எங்கள் விரிவடைந்து வரும் விற்பனை நெட்வொர்க்கினால், மதிப்புரிமை வழங்கும் ஓனர்ஷிப் சலுகைகள், மற்றும் பரந்த தயாரிப்பு தொகுப்பு ஆகியவை, எங்கள் 5 லட்சம் விற்பனை மைல்கல்லுக்கும் ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து கிடைக்கும் வருடாந்திர வளர்ச்சிக்கும் முக்கிய இயக்க சக்திகளாக உள்ளன. எங்கள் தயாரிப்புகளின் மூலம் மற்றும் எங்கள் வாடிக்கையாளர்கள், ரசிகர்களுடன் இன்னும் நெருக்கமாக இணைவதன் மூலம், இந்த வேகத்தைத் தொடர்ந்து நிலைநிறுத்துவோம்.

” ஸ்கோடா ஆட்டோ இந்தியாவில் செடான் வரிசையின் வலிமையான பாரம்பரியத்தை கொண்டு தன்னை நிறுவியது. 130 ஆண்டுகள் உலகளாவிய பாரம்பரியம் மற்றும் இந்தியாவில் 25 ஆண்டுகள் வரலாறுடன், ஆக்டோவியா பிராண்டிற்கான வலிமையான பாரம்பரியமாக இருந்தது. தன் 25வது ஆண்டு விழாவில் பிராண்டு எட்டிய பல மைல்கற்களில் ஒன்றாக ஆக்டோவியா ஆர்எஸ் மீண்டும் வந்ததன் மூலம் இது இந்தியாவின் மிகப் பழமையான மாடல்களில் ஒன்றாக ஆகியுள்ளது.

முன்பதிவுகள் தொடங்கப்பட்ட 20 நிமிடங்களில் இந்தியாவிற்கு ஒதுக்கப்பட்ட ஒவ்வொரு ஆக்டோவியா காரும் விற்றுத் தீர்ந்துவிட்டன. ஸ்லாவியா செடான் 1.0 டிஎஸ்ஐ மற்றும் 1.5 டிஎஸ்ஐ வடிவங்களில், ஸ்கோடா ஆட்டோ இந்தியா இந்தியாவில் தனது செடான் மரபை தொடர்கிறது. ரூ. 7.5 லட்சம் முதல் ரூ. 45.9 லட்சம் வரை, , ஸ்கோடா ஆட்டோ இந்தியா இந்தியாவில் ஒவ்வொரு தேவைக்கும், ஆசைக்கும் ஏற்ப வடிவமைக்கப்பட்ட விரிவான எஸ்யூவி தொடரை வழங்குகிறது.

மேலும் படிக்க