• Download mobile app
05 Dec 2025, FridayEdition - 3586
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காற்று மாசு காரணமாக ஏர் பியூரிபையர் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரிப்பு: குரோமாவில் விற்பனை 30 சதவீதம் உயர்வு

December 5, 2025 தண்டோரா குழு

சுற்றுச்சூழல் பாதிப்பு காரணமாக காற்று மாசு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக சுத்தமான காற்றை சுவாசிப்பது என்பது அரிதான ஒன்றாக மாறிவிட்டது. இந்த நிலையில் அதிக அளவிலான மக்கள் ஏர் பியூரிபையரை பயன்படுத்த துவங்கி உள்ளனர்.

இதனால் டாடாவின் குரோமா ஷோரூமில் அதன் விற்பனையானது கடந்த ஆண்டைக் காட்டிலும் 30 சதவீதம் அதிகரித்து உள்ளது. இதில் நடப்பு ஆண்டில் நான்கில் மூன்று ஏர் பியூரிபையர் டெல்லியில் விற்பனையாகி உள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

குரோமாவில் விற்பனை செய்யப்படும் ஏர்பியூரிபையரில் 72 சதவீதம் டெல்லியில் விற்பனை செய்யப்படுகிறது. ஏனெனில் இங்கு அதிக அளவில் காற்று மாசு உள்ளது. டெல்லியைத் தொடர்ந்து மகாராஷ்டிராவில் 12 சதவீதம், கர்னாடகாவில் 4 சதவீதம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக இந்நிறுவனம் கூறியுள்ளது.தூசி, மகரந்தம் மற்றும் பூஞ்சை போன்ற காற்றில் பரவும் துகள்களை அகற்றும் உயர் திறன் கொண்ட பில்டர்களையே வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்புகிறார்கள்.

மாசு மற்றும் துர்நாற்றங்களுக்கு எதிராக தங்களை பாதுகாத்துக் கொள்ள, பல அடுக்கு பாதுகாப்பைக் கொண்ட மேம்பட்ட மாடல்களையே பெரும்பாலான வாடிக்கையாளர்கள் விரும்பி வாங்குகின்றனர். இது குறித்து இன்பினிட்டி ரீடெய்ல் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ஏர்பியூரிபையர்கள் தற்போது பருவகாலத்திற்கான தயாரிப்புகளாக பார்க்கப்படுவதில்லை, அவை குறிப்பாக டெல்லி போன்ற நகரங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு ஆண்டு முழுவதும் அவசியமான ஒன்றாக மாறிவிட்டன.

குரோமாவில், அறையின் அளவு, அவர்களின் பட்ஜெட் மற்றும் சுகாதாரத் தேவைகளின் அடிப்படையில் சரியான அதே நேரத்தில் அவர்களின் வீடுகளுக்கு ஏற்ற மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் பில்டர்களைக் கொண்ட ஏர்பியூரிபையர்கள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்படுகிறது என்று தெரிவித்தார்.ஏர்பியூரிபையர் நிறத்தைப் பொறுத்தவரை வெள்ளை நிறம் வாடிக்கையாளர்கள் இடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. குரோமாவில் விற்பனை செய்யப்பட்ட மொத்த பியூரிபையரில் வெள்ளை நிறுவனம் 77 சதவீதம், கருப்பு 19 சதவீதம் மற்றும் மெட்டாலிக் நிறங்கள் 4 சதவீதம் விற்பனை செய்யப்பட்டுள்ளன.மேலும் விலையைப் பொறுத்தவரை ரூ.5 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரையிலான விலையில் 49 சதவீதம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இதில் சூப்பர்-பிரீமியம் அடுத்த பெரிய வகையாகும், இது 36 சதவீத விற்பனை செய்யப்பட்டு உள்ளது. இது சிறந்த கவரேஜ் மற்றும் ஸ்மார்ட்டர் அம்சங்களைக் கொண்டுள்ளது. இதன் காரணமாக வாடிக்கையாளர்கள் இதை அதிக அளவில் விரும்பி வாங்குகின்றனர். மேலும் நடப்பு ஆண்டில் குரோமாவில் விற்பனை செய்யப்பட்ட மொத்த ஏர்பியூரிபையரில் பிலிப்ஸ் மற்றும் டைசன் பிராண்டுகள் 84 சதவீத பங்களிப்பைக் கொண்டுள்ளன.இங்கு ஒரே வாரத்தில் அதிக அளவிலான ஏர்பியூரிபையர் விற்பனை செய்யப்பட்டது. இது நிறுவனத்தின் வருடாந்திர

ஏர்பியூரிபையர் விற்பனையில் 27 சதவீதமாகும். மொத்த விற்பனையில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பு ஆண்டில் இதன் விற்பனை 30 சதவீதம் அதிகரித்துள்ளது. இது காற்று மாசு தொடர்பாக மக்களிடம் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வை காட்டுவதாக குரோமா தெரிவித்துள்ளது.சுமார் 12 சதவீத வாடிக்கையாளர்கள் தங்கள் சாதனங்களைப் பாதுகாக்க குரோமாவின் ஜிப்கேர் திட்டத்தை தேர்வு செய்துள்ளனர்.மேலும் அவர்களின் ஏர்பியூரிபையரின் நீண்டகால செயல்திறனை உறுதி செய்வதற்காக நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் மற்றும் சேவை வசதியையும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க