September 5, 2025
தண்டோரா குழு
கே.ஜி.குழுமத்தின் அங்கமான டிஎன்சிடி நிறுவனம்,கோவையில் இன்று “மேக்னம் சிட்டி” என்னும் புதிய குடியிருப்பு வளாகத்தை அறிமுகம் செய்துள்ளது.
இதுகுறித்து டிஎன்சிடி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சஞ்சனா விஜயகுமார் கூறியதாவது:-
90 ஆண்டுகளுக்கும் மேலாக ஹெல்த்கேர் மற்றும் கல்வி பணியில் பாரம்பரியமுள்ள கே. ஜி. குழுமத்தின் அங்கமான டிஎன்சிடி நிறுவனம், கடந்த 2010-ம் ஆண்டு துவக்கப்பட்டது. இதுவரை 25 குடியிருப்பு திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளோம். 4000-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை கொண்டுள்ளோம்.எங்களின் அனைத்து திட்டங்களும் நல்ல முறையில் செயல்பட்டு வருகின்றது. எங்களிடம் வீடு வாங்குவோர் முதல் முறை வீடு வாங்கும் வாடிக்கையாளர்களே அதிகம்.
இந்த மேக்னம் சிட்டி குடியிருப்பு வாடிக்கையாளர்கள் சுலபமாக அனுகக்கூடிய வகையில் விமான நிலையம், மருத்துவமனை, கல்லூரிகள், கோவை கொடிசியா மற்றும் டைடல் பூங்காவிற்கு அருகில் அமைந்துள்ளது. ப்ரீகாஸ்ட் கட்டுமான தொழில்நுட்பத்தில் கோவையில் குடியிருப்பு வீடுகளை அறிமுகப்படுத்திய முன்னோடி நிறுவனமாக டிஎன்சிடி உள்ளது.
இதன் மூலம் கோவையின் கட்டுமான வளர்ச்சியில் இந்நிறுவனம் ஓர் முக்கிய பங்காற்றி வருகிறது.
இந்த தொழில்நுட்பம் மூலம் தரமான கட்டிடம், விரைவான ஒப்படைப்பு. குறைந்த பொருள் விரயம் மற்றும் நீண்ட கால ஆயுள் ஆகியவற்றை உறுதி செய்கிறது. இன்றைய நவீன வாழ்க்கைக்கு ஏற்ப இங்கு வசிப்பவர்களின் வாழ்வுத்தரத்தை மேம்படுத்த விளையாட்டு வசதிகள், உடற்பயிற்சி மையங்கள், சமூக நிகழ்ச்சிகளுக்கேற்ற மண்டபங்கள், பசுமையை ஊக்குவிக்கும் வசதிகள் என பல சிறப்பம்சங்கள் உள்ளன.
சிறப்பு அறிமுக சலுகையாக – 2 பிஹெச்கே அடுக்குமாடி குடியிருப்புகள் ரூ.56.99 லட்சம் (மார்கெட் விலை ரூ.75 லட்சம்) என அறிவிக்கப்பட்டுள்ளன. அதேபோல் 3பிஹெச்கே அடுக்குமாடி குடியிருப்புகள் ரூ.74.99 லட்சம் (மார்கெட் விலை ரூ.95 லட்சம்) என அறிவிக்கப்பட்டுள்ளன.
மேலும் வெளிநாட்டில் இருந்து கோவையில் வீடு வாங்க விரும்புவோர் எங்களின் இணையதளத்தின் மூலம் நேரடியாக கலந்துறையாடி புக்கிங் செய்யலாம். அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும்.
செப்டம்பர் 5, 6 மற்றும் 7-ம் தேதிகளில் மூன்று நாள் நடைபெறும் கலாச்சார விழா “மேக்னம் கொண்டாட்டம்” மூலம் இந்த அறிமுக விழா சிறப்பாக நடைபெறுகிறது. இதில் துடிப்பான நடன நிகழ்ச்சிகள், புகைப்பட அரங்குகள், குழந்தைகளுக்கான ஓவியப் பட்டறைகள், கேரிகேச்சர் எனும் கேலிச்சித்திரக் கலைகள் உள்ளிட்ட பல நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.
கோவையில் ரியல் எஸ்டேட் துறை மிகவும் வளர்ச்சி அடைந்து வருகின்றது. இதற்கு காரணம். கோவைக்கு மாஸ்டர் பிளான் அறிவித்துள்ளது. இதன் மூலம் குடியிருப்பு தேவைகள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அலுவலக இடங்கள் தேவை அதிகரிக்கும். கோவையில் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்துவ இதுவே சரியான நேரம் ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.
விற்பனை தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு 76676 99999 / 76674 66666 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் அல்லது www.tncd.in இணையதளத்தைப் பார்க்கலாம்.