August 22, 2025
தண்டோரா குழு
சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் (எஸ்ஐஏ) குறைந்த கட்டணத் துணை நிறுவனமான ஸ்கூட் புதிய கிரிஸ்ஃப்ளையர் அவார்டு சார்ட்டை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது.
இதன் மூலம் உறுப்பினர்கள் ஸ்கூட் விமானப் பயணங்களுக்கு மைல்களைப் பயன்படுத்தி கவர்ச்சிகரமான கட்டணத்தில் பயணம் செய்யலாம்.இந்த அவார்டு சார்ட் பெரிய அளவில் ரிவார்டுகளையும் நன்மைகளையும் வழங்குகிறது. எக்கனாமி வகுப்பு அடிப்படை கட்டணங்களுக்கு ஒரு வழிப்பயணரிடம் ப்ஷன்கள் மிகக்குறைவான 1500 கிறிஸ்ஃப்ளையர் மைல்களில் இருந்து தொடங்குகிறது.
2015 ஆம் ஆண்டு கிறிஸ்ஃப்ளையர் ரிவார்டுகள் திட்டத்தில் இணைந்ததில் இருந்து ஸ்கூட் நிறுவனம் கிறிஸ்ஃப்ளையர் உறுப்பினர்களுக்கு தன் சலுகைகளை விரிவுபடுத்தி வருகிறது.இதில் பாங்காக், ஹாங்சோ, ஈப்போ, ஜெஜு, தைபே மற்றும் வியன்னா போன்ற பிரபலமான இடங்களுக்கு விமானங்களில் தங்கள் மைல்களை மீட்டுக்கொள்ள உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அவார்டு சார்ட்டும் அடங்கும்.கிறிஸ்ஃப்ளையர் உறுப்பினர்கள் இப்போது எக்கானமி வகுப்பில் ஸ்கூட் சேவர் அல்லது ஸ்கூட் அட்வாண்டேஜ் இருக்கைகளைப்பெறலாம். இது முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் கிடைக்கும்.
கிறிஸ்ஃப்ளையர் மைல்களை ஸ்கூப் எக்கனாமி வகுப்பு அடிப்படை கட்டணங்களை மீட்டெடுக்க மட்டுமே பயன்படுத்த முடியும். வரிகளை போலவே கூடுதல் ஆட்-ஆன்களையும் பிற பணம் செலுத்தும் முறைகள் மூலம் தனித்தனியாக செலுத்தலாம்.இது உறுப்பினர்களுக்கு அவர்களின் பயணங்களைத்தனிப்பயனாக்க அதிக நெகிழ்வுத்தன்மையையும் தேர்ந்தெடுப்புகளையும் வழங்குகிறது. உறுப்பினர்கள் வாங்கிய ஆட்-ஆன்களுக்கு ஸ்கூட்டால் இயக்கப்படும் விமானப் பயணங்களில் எஸ்ஜிடி-க்கு 1 மைல் என்ற விகிதத்தில் கிறிஸ்ஃப்ளையர் மைல்களையும் பெறலாம்.விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பொருந்தும்.
“பயணம் அணுக கூடியதாகவும் பலனளிப்பதாகவும் இருக்கவேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.மேலும் ஸ்கூட்டின் அவார்டு சார்ட்டை அறிமுகப்படுத்துவது என்பது கிறிஸ்ஃப்ளையர் உறுப்பினர்களுக்கு அதிக மதிப்பை வழங்குவதற்கான எங்கள் வழி முறையாகும். ஸ்கூட்டின் அவார்டு சார்ட் மூலம் கிறிஸ்ஃப்ளையர் உறுப்பினர்கள் இப்போது ஹாங்சோ, ஜெஜு, தைபே மற்றும் வியன்னா உள்ளிட்ட நகரங்களுக்கு கவர்ச்சிகரமான மீட்டெடுக்கும் விகிதங்களில் பயணிக்க தங்கள் மைல்களில் இருந்து அதிகப்பலன்களை பெறலாம். இந்த முறையில் உறுப்பினர்கள் எஸ்ஐஏ நிறுவனத்தின் நெட்வொர்க் முழுவதும் அதிக இடங்களுக்குச் செல்ல தங்கள்மைல்களை அதிகப்படுத்தலாம்,” என்று ஸ்கூட்டின் தலைமை வணிக அதிகாரி கால்வின்சான் கூறினார்.
உறுப்பினர்கள் ஏற்கெனவே கிறிஸ்ஃப்ளையர் மைல்கள் மூலம் தங்கள் விமான முன்பதிவுகளுக்கு முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ பணம் செலுத்த முடியும் என்றாலும் அவார்டு சார்ட்டின் படி நிலையான கட்டணங்களில் ஃப்ளை ட்ரிடம்ப்ஷன்களை செயல்படுத்துவதன் மூலம் உறுப்பினர் சலுகைகளை மேம்படுத்துவதற்கான ஸ்கூட்டின் உறுதிப்பாட்டை இந்த சமீபத்திய முயற்சி வலிமைப்படுத்துகிறது. அதே நேரத்தில், பிபிஎஸ் கிளப், கிறிஸ் ஃப்ளையர் எலைட் கோல்டு மற்றும்கிறிஸ் ஃப்ளையர் எலைட் சில்வர் உறுப்பினர்கள் ஸ்கூட்டில் பயணிக்கும் போது தங்கள் சிறப்புசலுகைகளை தொடர்ந்து அனுபவிப்பார்கள்.
இவற்றில் குறைந்த பட்சம் 20 கிலோ எடையுள்ள பேக்கேஜை ஆன்லைனில் வாங்குவதன் மூலம் கூடுதலாக 5 கிலோ எடையுள்ள பேகேஜ் மேம்படுத்தல், காம்ப்ளிமெண்ட்ரி ஸ்டாண்டர்டு இருக்கைத்தேர்வு மற்றும் போர்டிங்கில் முன்னுரிமை ஆகியவை அடங்கும்.